Thursday, March 8, 2012

MOTHER AND THE MOTHERHOOD - tamil

தாயும் தாய்மையும்


தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது என்றுரைத்தார்
நபிகள் நாதர்.
மனைவியை கூட 'அம்மா' என்று அழைப்பதில் தவறில்லை,
என்று சொன்னார் காந்தி அடிகள்.
அமெரிக்க பெண்களை 'தாயே' என்று அழைத்து பெண்களின் சிறப்பை
உலகுக்கு உயர்த்தினார் சுவாமி விவேகானந்தர்.
தாய் நாட்டை 'தந்தை நாடு' என்று உலகுக்கு அறிமுகம் செய்தான்'
துருக்கியின் தந்தை -  அடா டர்க்.
ஆனால் நாமோ நம் நாட்டை 'தாய் நாடு' என்று அழைத்து,
பெருமை கொள்கிறோம். பெண்களை மதிக்கும் நாடு நம் நாடு.
"தாயில் சிறந்த கோவில் இல்லை " என்பது தமிழ் பண்பாடு.

சர்வதேச மகளிர் தினத்தை போற்றும் இந்த நாளில் மகளிர் பற்றி 
வந்த சில செய்திகள் மனதை பதற வைக்கிறது.










இதில் அதிர்ச்சி என்னவென்றால் இந்த சம்பவங்கள் அனைத்தும்
மகளிர் பற்றி இன்றைய தினம் வெளிவந்த பத்திரிகை செய்திகள்.

தாயையும், தாய்மையையும் நாம்  இன்றும் போற்றி பாதுகாத்து
வருகிறோம்.தந்தை தவறு செய்தால் கண்டுகொள்ளாமல் விட்டு விடும்
குழந்தைகள், தாயின் சிறு தவறுகளை கூட தவறியும் வெளியில்
சொல்வதில்லை. எந்த மகனுமே தன் தாய் நெறி தவறாதவள், நேர்மையானவள்
மிகவும் தூய்மையானவள்,இறை பக்தி மிக்கவள் என்றே மனதில் எண்ணி
வருகிறான். ஒரு கெட்ட மகன் கூட தன் தாயை உயர்வாகவே எண்ணி
மகிழ்கிறான். தாய் தவறு செய்தாலும் அதை மூடி மறைக்கவே விரும்புகிறான்.
பெரும்பாலான குழந்தைகள், தாயின் குண இயல்பிலேயே தங்களை
வெளிப்படுத்தி கொள்ள விரும்புகின்றன.
தந்தை குடித்தால் அதை ஏற்று கொள்ளும் குழந்தைகள், தாய் குடித்தால்
மிரள்கின்றன.தாய் திருடினால் வெட்கப்படுகின்றன. வேறு நபருடன் சிரித்து
பேசினாலோ அதன்  மனம் பேதலித்து விடுகிறது. தன் தாயை பற்றி
கொண்டிருந்த உயர்வான நம்பிக்கைகள் தகரும் போது, அது ஏற்படுத்தும்
மனவலியை குழந்தைகளால் பொறுக்க இயல்வதில்லை. தன் தாய் கெட்டவள்
என்று உணரும் குழந்தை மற்ற பெண்களையும் இதே கண்ணோட்டத்துடன் காண
துவங்குகிறது. தாயின் மீது கொண்ட நம்பிக்கை தகரும்போது, மற்ற பெண்கள்
அனைவரையும் சந்தேகத்துடன் உற்று நோக்குகிறது. ஆண் குழந்தைகளால் இந்த 
அதிர்சிகளை எளிதில் ஜீரணிக்க இயல்வதில்லை. மனதுக்குள் தேங்கி விடும் இந்த 
வடுக்கள், குழந்தை வளர வளர  குழந்தைகளின் குண இயல்பிலும், நடத்தையிலும் 
பெரும் மாறுதல்களை விளைவித்து விடுகின்றன. பின்னாளில் வளர்ந்த 
இளைனர்களின் மண வாழ்விலும்
 கணவன்-மனைவி உறவிலும் பல விரிசல்கள் ஏற்பட இது வழி 
வகுக்கும். இந்த மனவலிகளில்  இருந்து மீளவே  குழந்தைகள் கூட
"போதை மாத்திரைகளை"
 நாடுகின்றன. வயதுக்கு வரும் முன்பே 'குடிக்கவும்'
துவங்கி விடுகின்றன. போதைக்கு அடிமை ஆகிவிட்டால் திருடவும் கற்று
கொள்கின்றன. குழந்தைகள் கொடிய குற்றவாளிகளாக மாறி விடுவதற்கும்
இதுவே காரணம்.
மேற் சொன்ன செய்திகளில் வரும் பெண்களின் குழந்தைகள், இது போன்ற
பெரும் குற்றங்களை தன் தாய் செய்தாள் என்று அறியும் போது அவர்கள்
மனம் படும் வேதனை, அவர்கள் நடத்தையையும், குண இயல்பையும் - ஏன்
அவர்கள் வாழ்க்கையையே நிர்மூலம் ஆக்கி விடும் என்பதை குற்றம்
செய்யும் தாய்மார்கள் உணர வேண்டும்.





No comments:

Post a Comment