Tuesday, July 10, 2012

JAYALALITHA AND THE TAMIL MUSLIMS

ஜெயலலிதாவும் முஸ்லிம்களும்

தமிழக அரசியலில் முஸ்லிம்களின் பங்கு என்பது ஆளும் அரசியலை அசைத்து பார்க்கின்ற 
அளவுக்கு வலிமை வாய்ந்த ஒரு பெரும் சக்தியாகும். இந்த உண்மையை எல்லா பெரிய கட்சி 
களும் தெரிந்து வைத்திருக்கின்றன.இந்த முஸ்லிம் சக்தியை ஒன்றிணைக்கும் பாலமாக  தோன்றியவை தான் தமிழகத்தில் நாம் இன்று காணும் சிறிய அல்லது பெரிய முஸ்லிம் பெயர் தாங்கிய அரசியல் இயக்கங்கள்.தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த முஸ்லிம் கட்சிகள் திராவிட அரசியல் இயக்கங்களையே சார்ந்து  இயங்கி வருகின்றன.தனித்து இயங்கும் நிலையில் இவை இல்லை. முஸ்லிம்  தலைவர்களும் தான் சேரும் அணியை பொருத்துமுஸ்லிம்களை,அந்த கட்சிகளுக்கு  ஒட்டுபோடவைக்க முயற்சிகள் மேற் கொள்கின்றனர்.தான் அணி சேர்ந்த கட்சி,ஆட்சிக்கு வந்தால் இந்த குட்டி முஸ்லிம்  தலைவர்களுக்கு சில பதவிகளும்,சில சலுகைகளும் கிடைத்து விடுகின்றன. எதிர்பார்த்த  பதவி கிடைக்காவிடின் இந்த தலைவர்கள் கட்சியை, அடுத்த தேர்தலுக்குள் மாற்றி  விடுகின்றனர்.பெரிய கொள்கைகள்  எதுவும் இல்லாததால்,பிற கட்சிகளின் கொள்கைகளை  இவர்கள் அப்படியே ஏற்று கொள்கின்றனர்.சில நேரங்களில் தேர்தல் வெற்றி கருதி பெரிய  கட்சிகளின் சின்னங்களில் நின்று வெற்றி பெற்று விடுகின்றனர்.இப்போதுள்ள முஸ்லிம்  தலைவர்கள் எவரையும் குறை சொல்வது அல்லது குறை  காண்பது என் நோக்கமல்ல. உண்மை நிலையை மக்களுக்குஎடுத்துரைப்பது ஒன்றே என் நோக்கமாகும். மாநில ஹஜ் கமிட்டி, மாநில வக்ப்  வாரியம் போன்ற அமைப்புகளில், அதிக
ஆண்டுகள்,உறுப்பினராக பணி புரிந்த அனுபவம் எனக்கு உண்டு. முஸ்லிம் மேல் தட்டு மனி-
தர்கள் பலரை இந்த கால கட்டங்களில் நான் அறிந்ததுண்டு. அவர்களோடு நெருங்கி பழகியதும் 
உண்டு. இவர்களில் பலர், முஸ்லிம் அரசியல் கட்சி தலைவர்களை பற்றி நல்ல கருத்து  கொண்டவர்களாக இல்லை. அவர்கள் கூறும் சில  கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை 
என்றாலும் சாமானிய முஸ்லிம் சமுதாயம் இவர்களால் அடைந்த பயன், எதவும்  இல்லை என்ற பொதுக் கருத்து ஏற்றுக் கொள்ளும் நிலையில் உள்ளது  என்பதே என் கருத்தாகும். 

இன்றைய  தமிழகத்தில் பெரும்பாலான முஸ்லிம்கள் தி.மு.க, அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ்
இயக்கத்தில் அதிகம் உள்ளனர். முஸ்லிம் அரசியல் கட்சிகளை விட மாநில கட்சிகளே இவர்களை  மிகவும் கவர்கின்றன. பாமர முஸ்லிம் ஏழ்மை நிலையில் இருப்பதால் இவனால் பிரபலமான முஸ்லிம் தலைவர்களை எளிதில் சந்திக்க முடிவதில்லை. மேடைகளில் "கை அசைக்கும்" தலைவர்களாக இருப்பதையே இவர்களில் பலர் எதிர் பார்கின்றனர். அரசியல் கொள்கைகளை சொல்லி முஸ்லிம் இளைனர்களை கவர இயலாது என்பதலாயே "இஸ்லாமிய கருத்துகளை சொல்லி அரசியல் ஆதாயம் தேடும் போலி அரசியல்வாதிகள்" தமிழகத்தில் இப்போது மிகவும் பெருத்து விட்டனர். இந்த போலி தலைவர்களால் சாதாரண முஸ்லிம்களுக்கு எந்த பலனும் இல்லை என்பதை முஸ்லிம் இளைனன் உணர வேண்டும். காயிதே மில்லத் போன்ற  ஒப்பற்ற உயர்குணம் கொண்ட உயர்ந்த மகான்கள் இப்போது நம்மிடையே இல்லை. பேச்சிலும் செயலிலும் நேர்மையை கைக்கொண்ட அந்த உத்தமர்கள் போல் உயர்ந்த 'மாடல் தலைவர்கள்'  இன்றைய முஸ்லிம் அரசியலில் இல்லை.
இஸ்லாமிய கொள்கைகள் தமிழக அரசின் கொள்கைகள் இல்லை.
மதுவை இவர்களால் ஒழிக்க இயலாது.
தனி மனித ஒழுக்கம் பற்றி அரசு சட்டம் இயற்ற இயலாது.
ஒழுங்கீனம் கவனத்திற்கு வந்தால் மட்டுமே
அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.
தனி முஸ்லிம் மனிதன் வாழ்வில் அரசு 
எப்போதும் தலை இடுவது இல்லை.
ஈமான்-இஸ்லாம் பற்றி
அரசுக்கு கவலை இல்லை.
இவை ஒரு முஸ்லிமின் தனி உடைமை.
தொழுகை, நோன்பு இவை உடல் சார்ந்தவை.
ஜகாத் பொருள் சார்ந்தது.
ஹஜ் கடமை வசதி - வாய்ப்பு மற்றும்
உடல் ஆரோக்கியம்,ஆன்மா சார்ந்தவை.
இந்த தனி கடமைகளை நிறைவு செய்ய
ஒரு முஸ்லிமுக்கு அரசும் தேவை இல்லை,
முஸ்லிம் அரசியல் கட்சிகளும் தேவை இல்லை.
சாதாரணமாகவே பெரும்பாலான முஸ்லிம்கள்
உலக வாழ்க்கை சுகங்களுக்கு முக்கியத்துவம்
கொடுக்காதவர்கள். மறு உலக வாழ்க்கையில்  அதிக
நாட்டம் உள்ளவர்கள். இதை தெளிவாக புரிந்து கொண்ட
கிரிமினல் முஸ்லிம் அரசியல் வாதிகள்
முஸ்லிம்களை தவறான பாதைக்கு வழி நடத்தி செல்கின்றனர்.
இதனால் செய்யாத பல குற்ற வழக்குகளில் சிக்கி இளைஞர்கள் வாழ்வை
தொலைக்கிறார்கள். இவர்களை காப்பாற்ற எந்த அரசியல்
கட்சிகளும் முன்வருவதில்லை. பல முஸ்லிம் குடும்பங்கள்
இதனால் சீரழிந்து போய் விட்டன.
 உலகில் வாழும் எல்லா மனித இனத்துக்கும்
உணவு,உடை மற்றும் உறைவிடம் மிகவும் அவசியம்.
இதை விட மிகவும் அவசியம் 'பாதுகாப்பு'.
முஸ்லிம்களும்,முஸ்லிம் குடும்பங்களும் பாதுகாப்பான
சூழலில்  இப்போது இல்லை.முஸ்லிம்  M.L.A அல்லது M.P.களை 
நம்பினால் கை விட்டு விடுவதாகவும் மாற்று மத M.L.A, M.Pகளே 
உதவிக்கு வருவதாகவும் வேறு பட்ட கருத்துக்கள்  நிலவுகின்றன.
இதை ஆய்வு செய்வது நம் நோக்கமல்ல.
தமிழ்நாட்டு அரசியலில் கடந்த 50 வருடங்களுக்கும்  மேலாக 
காங்கிரஸ்,தி.மு.க மற்றும் அ.தி.மு.க  பிரமுகர்கள் அல்லது 
தொண்டர்களே அமைச்சர்களாக  வலம்  வருகின்றனர்.
முஸ்லிம் அமைப்புகளை சார்ந்தவர்கள் அல்லது முஸ்லிம் கட்சி 
நிர்வாகிகள் அமைச்சர்கள் ஆன வரலாறு இதுவரையில் இல்லை.
சிறிய பதவிகளுக்காக அலைவதைத் தவிர வேறு எதையும் 
இவர்கள் சாதித்ததாக  தெரியவில்லை.
தி.மு.க அல்லது அ.தி.மு.க- வை சுற்றியே இவர்கள் 
வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள்.
கலைனர் முஸ்லிம்களின் நண்பராக இருக்கலாம், ஆனால்
ஜெயலலிதா முஸ்லிம்களின் எதிரி அல்ல என்பதே என் கருத்து.
கிருத்துவ தலைவர்கள் போல் முஸ்லிம் அறிஞர்கள் எவரும்
இவரை சந்திக்க முயல்வதில்லை. முயன்றால் முஸ்லிம்கள்
முன்னேற்றத்துக்கு இவர் மிகவும் பயனுள்ள பல நல்ல
காரியங்களை விரைவில் செய்து தருவார் என்பது
எனது அசைக்க முடியாத நம்பிக்கை.

ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக, முதன் முறையாக
பதவி ஏற்ற நேரம் அது. தினத்தந்தி பத்திரிகை என்னிடம்
அவர் பற்றி ஒரு கட்டுரை தருமாறு என்னை கேட்டது.
ஜெயலலிதா பற்றி நான் எழுதிய அந்த கட்டுரையை
என் நண்பர்கள் பலரும் விரும்பியதின் பேரில்
இங்கு பதிவு செய்வதில் மிகவும் மகிழ்கிறேன்.