Wednesday, January 22, 2014

ATHAVULLAH AND HIS NEELA NATHI POOKKAL

அதாவுல்லாவும்  நீல நதி  பூக்களும் 

 
சமீபத்தில்  கவிஞர் அதாவுல்லா  எழுதிய  நீல நதிப் பூக்கள்  என்ற 
கவிதை  நூல் வெளியீட்டு  விழா  கோட்டாரில்  மிகவும்  சிறப்பாக  நடைபெற்றது. சாகத்திய  அகாடமி  விருது  பெற்ற  நாவலாசிரியர்  திருமிகு  பொன்னீலன்  அவர்கள்  கவிதை  நூலை  வெளியிட்டு  சிறப்புரை  ஆற்றினார்கள். பேராசிரியர்  ஹசன்  அவர்கள்  தலைமை உரை  நிகழ்த்தினார்கள். பாவலர்  சித்திக்  விழா  நிகழ்சிகளை  தொகுத்து  வழங்கினார். விழாவில்  அறிஞர்  பெருமக்கள்,கவிஞர்கள்,பேராசிரியர்கள்  மற்றும் திரளான  பொது மக்கள் கலந்து கவிஞரை  வாழ்த்தினர். முன்னாள்  எம்.எல்.எ.முகமது இஸ்மாயில், டாக்டர்.அபிபுல்லா, பேராசிரியர் உதுமான், அட்வகேட்.அபுல் கலாம், கோட்டாறு இமாம் மற்றும் கோட்டாறு  ஜமாஅத் தலைவர் உட்பட  பலர்  கலந்து கொண்டு  வாழ்த்துரை வழங்கினர்.
 
 
சில படக் காட்சிகள் 
 

 
பேராசிரியர்  ஹசன்  அவர்கள்
 

 
டாக்டர்.அபிபுல்லா 
 
 
திருமிகு பொன்னீலன்  அவர்கள் 
 
 
பொன்னீலன்  அவர்கள்  உரை  தொடர்ச்சி 
 
 
கவிஞர்.அதாவுல்லாவின்  நன்றி யுரை 

Friday, November 9, 2012

HASSAN AND HIS MISSION

ஹசன் அவர்களும் மக்கள் பணியும் 


பேராசிரியர் திரு முகமது ஹசன் அவர்கள் குமரி மாவட்ட 
மக்களுக்கு மிகவும் அறிமுகமானவர். திருவிதான்கோடு 
முஸ்லிம் கலைக் கல்லூரியின்  முன்னாள் முதல்வர் அவர்.
மென்மையான இதயத்துக்கு சொந்தக்காரர்.
மக்களின் அடிப்படை தேவைகளுக்கு அதிக 
ஆரவாரமின்றி குரல்  கொடுப்பவர்.
குமரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான 
ரயில் ஹால்ட் ஸ்டேஷன் ஒன்றை பார்வதிபுரத்தில் 
அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி  அதற்கான குழு 
ஒன்றை அமைத்து நீண்ட நாட்கள் போராடி வருபவர்.

 

இந்த ஸ்டேஷன் பார்வதிபுரத்தில் அமைய வேண்டும்
என்பதை வலியுறுத்தி வரும் 11-ம் தேதி காலை
10 மணி முதல் மாலை 4மணி வரை
பார்வதிபுரத்தில் முழு சத்தியாகிரக அற போராட்டம்
நடைபெற உள்ளது.இந்த மாபெரும் போராட்டத்திற்கு
பேராசிரியர் ஹசன் அவர்கள் தலைமை ஏற்கிறார்.
இந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள்
தளவாய் சுந்தரம், சுரேஷ் ராஜன் மற்றும்
பொன் ராதா கிருஷ்ணன், ஹெலன் டேவிட்சன் எம்.பி,
முன்னாள் எம்.பி.ஆஸ்டின், பெல்லார்மின்,
எம்.எல்.எக்கள் பிரின்ஸ், ஜான் ஜேகப், புஷ்ப லீலா ஆல்பன்,
விஜய தாரணி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் முகமது
இஸ்மாயில், பெர்னார்ட், நூர் முகமது, லீமாரோஸ்,
நாகர்கோயில் நகராட்சித் தலைவி மீனதேவ்
உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
மக்கள் பாராட்டும் சிறந்த மக்கள் பணியை
அகிம்ஸா வழியில் சப்தமின்றி நடத்தி வரும்
பேராசிரியர் ஹசன் அவர்களுக்கு நமது 
உளமார்ந்த பாராட்டுக்கள்.
மேலும் பணி தொடர வாழ்த்துக்கள 





Tuesday, July 10, 2012

JAYALALITHA AND THE TAMIL MUSLIMS

ஜெயலலிதாவும் முஸ்லிம்களும்

தமிழக அரசியலில் முஸ்லிம்களின் பங்கு என்பது ஆளும் அரசியலை அசைத்து பார்க்கின்ற 
அளவுக்கு வலிமை வாய்ந்த ஒரு பெரும் சக்தியாகும். இந்த உண்மையை எல்லா பெரிய கட்சி 
களும் தெரிந்து வைத்திருக்கின்றன.இந்த முஸ்லிம் சக்தியை ஒன்றிணைக்கும் பாலமாக  தோன்றியவை தான் தமிழகத்தில் நாம் இன்று காணும் சிறிய அல்லது பெரிய முஸ்லிம் பெயர் தாங்கிய அரசியல் இயக்கங்கள்.தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த முஸ்லிம் கட்சிகள் திராவிட அரசியல் இயக்கங்களையே சார்ந்து  இயங்கி வருகின்றன.தனித்து இயங்கும் நிலையில் இவை இல்லை. முஸ்லிம்  தலைவர்களும் தான் சேரும் அணியை பொருத்துமுஸ்லிம்களை,அந்த கட்சிகளுக்கு  ஒட்டுபோடவைக்க முயற்சிகள் மேற் கொள்கின்றனர்.தான் அணி சேர்ந்த கட்சி,ஆட்சிக்கு வந்தால் இந்த குட்டி முஸ்லிம்  தலைவர்களுக்கு சில பதவிகளும்,சில சலுகைகளும் கிடைத்து விடுகின்றன. எதிர்பார்த்த  பதவி கிடைக்காவிடின் இந்த தலைவர்கள் கட்சியை, அடுத்த தேர்தலுக்குள் மாற்றி  விடுகின்றனர்.பெரிய கொள்கைகள்  எதுவும் இல்லாததால்,பிற கட்சிகளின் கொள்கைகளை  இவர்கள் அப்படியே ஏற்று கொள்கின்றனர்.சில நேரங்களில் தேர்தல் வெற்றி கருதி பெரிய  கட்சிகளின் சின்னங்களில் நின்று வெற்றி பெற்று விடுகின்றனர்.இப்போதுள்ள முஸ்லிம்  தலைவர்கள் எவரையும் குறை சொல்வது அல்லது குறை  காண்பது என் நோக்கமல்ல. உண்மை நிலையை மக்களுக்குஎடுத்துரைப்பது ஒன்றே என் நோக்கமாகும். மாநில ஹஜ் கமிட்டி, மாநில வக்ப்  வாரியம் போன்ற அமைப்புகளில், அதிக
ஆண்டுகள்,உறுப்பினராக பணி புரிந்த அனுபவம் எனக்கு உண்டு. முஸ்லிம் மேல் தட்டு மனி-
தர்கள் பலரை இந்த கால கட்டங்களில் நான் அறிந்ததுண்டு. அவர்களோடு நெருங்கி பழகியதும் 
உண்டு. இவர்களில் பலர், முஸ்லிம் அரசியல் கட்சி தலைவர்களை பற்றி நல்ல கருத்து  கொண்டவர்களாக இல்லை. அவர்கள் கூறும் சில  கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை 
என்றாலும் சாமானிய முஸ்லிம் சமுதாயம் இவர்களால் அடைந்த பயன், எதவும்  இல்லை என்ற பொதுக் கருத்து ஏற்றுக் கொள்ளும் நிலையில் உள்ளது  என்பதே என் கருத்தாகும். 

இன்றைய  தமிழகத்தில் பெரும்பாலான முஸ்லிம்கள் தி.மு.க, அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ்
இயக்கத்தில் அதிகம் உள்ளனர். முஸ்லிம் அரசியல் கட்சிகளை விட மாநில கட்சிகளே இவர்களை  மிகவும் கவர்கின்றன. பாமர முஸ்லிம் ஏழ்மை நிலையில் இருப்பதால் இவனால் பிரபலமான முஸ்லிம் தலைவர்களை எளிதில் சந்திக்க முடிவதில்லை. மேடைகளில் "கை அசைக்கும்" தலைவர்களாக இருப்பதையே இவர்களில் பலர் எதிர் பார்கின்றனர். அரசியல் கொள்கைகளை சொல்லி முஸ்லிம் இளைனர்களை கவர இயலாது என்பதலாயே "இஸ்லாமிய கருத்துகளை சொல்லி அரசியல் ஆதாயம் தேடும் போலி அரசியல்வாதிகள்" தமிழகத்தில் இப்போது மிகவும் பெருத்து விட்டனர். இந்த போலி தலைவர்களால் சாதாரண முஸ்லிம்களுக்கு எந்த பலனும் இல்லை என்பதை முஸ்லிம் இளைனன் உணர வேண்டும். காயிதே மில்லத் போன்ற  ஒப்பற்ற உயர்குணம் கொண்ட உயர்ந்த மகான்கள் இப்போது நம்மிடையே இல்லை. பேச்சிலும் செயலிலும் நேர்மையை கைக்கொண்ட அந்த உத்தமர்கள் போல் உயர்ந்த 'மாடல் தலைவர்கள்'  இன்றைய முஸ்லிம் அரசியலில் இல்லை.
இஸ்லாமிய கொள்கைகள் தமிழக அரசின் கொள்கைகள் இல்லை.
மதுவை இவர்களால் ஒழிக்க இயலாது.
தனி மனித ஒழுக்கம் பற்றி அரசு சட்டம் இயற்ற இயலாது.
ஒழுங்கீனம் கவனத்திற்கு வந்தால் மட்டுமே
அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.
தனி முஸ்லிம் மனிதன் வாழ்வில் அரசு 
எப்போதும் தலை இடுவது இல்லை.
ஈமான்-இஸ்லாம் பற்றி
அரசுக்கு கவலை இல்லை.
இவை ஒரு முஸ்லிமின் தனி உடைமை.
தொழுகை, நோன்பு இவை உடல் சார்ந்தவை.
ஜகாத் பொருள் சார்ந்தது.
ஹஜ் கடமை வசதி - வாய்ப்பு மற்றும்
உடல் ஆரோக்கியம்,ஆன்மா சார்ந்தவை.
இந்த தனி கடமைகளை நிறைவு செய்ய
ஒரு முஸ்லிமுக்கு அரசும் தேவை இல்லை,
முஸ்லிம் அரசியல் கட்சிகளும் தேவை இல்லை.
சாதாரணமாகவே பெரும்பாலான முஸ்லிம்கள்
உலக வாழ்க்கை சுகங்களுக்கு முக்கியத்துவம்
கொடுக்காதவர்கள். மறு உலக வாழ்க்கையில்  அதிக
நாட்டம் உள்ளவர்கள். இதை தெளிவாக புரிந்து கொண்ட
கிரிமினல் முஸ்லிம் அரசியல் வாதிகள்
முஸ்லிம்களை தவறான பாதைக்கு வழி நடத்தி செல்கின்றனர்.
இதனால் செய்யாத பல குற்ற வழக்குகளில் சிக்கி இளைஞர்கள் வாழ்வை
தொலைக்கிறார்கள். இவர்களை காப்பாற்ற எந்த அரசியல்
கட்சிகளும் முன்வருவதில்லை. பல முஸ்லிம் குடும்பங்கள்
இதனால் சீரழிந்து போய் விட்டன.
 உலகில் வாழும் எல்லா மனித இனத்துக்கும்
உணவு,உடை மற்றும் உறைவிடம் மிகவும் அவசியம்.
இதை விட மிகவும் அவசியம் 'பாதுகாப்பு'.
முஸ்லிம்களும்,முஸ்லிம் குடும்பங்களும் பாதுகாப்பான
சூழலில்  இப்போது இல்லை.முஸ்லிம்  M.L.A அல்லது M.P.களை 
நம்பினால் கை விட்டு விடுவதாகவும் மாற்று மத M.L.A, M.Pகளே 
உதவிக்கு வருவதாகவும் வேறு பட்ட கருத்துக்கள்  நிலவுகின்றன.
இதை ஆய்வு செய்வது நம் நோக்கமல்ல.
தமிழ்நாட்டு அரசியலில் கடந்த 50 வருடங்களுக்கும்  மேலாக 
காங்கிரஸ்,தி.மு.க மற்றும் அ.தி.மு.க  பிரமுகர்கள் அல்லது 
தொண்டர்களே அமைச்சர்களாக  வலம்  வருகின்றனர்.
முஸ்லிம் அமைப்புகளை சார்ந்தவர்கள் அல்லது முஸ்லிம் கட்சி 
நிர்வாகிகள் அமைச்சர்கள் ஆன வரலாறு இதுவரையில் இல்லை.
சிறிய பதவிகளுக்காக அலைவதைத் தவிர வேறு எதையும் 
இவர்கள் சாதித்ததாக  தெரியவில்லை.
தி.மு.க அல்லது அ.தி.மு.க- வை சுற்றியே இவர்கள் 
வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள்.
கலைனர் முஸ்லிம்களின் நண்பராக இருக்கலாம், ஆனால்
ஜெயலலிதா முஸ்லிம்களின் எதிரி அல்ல என்பதே என் கருத்து.
கிருத்துவ தலைவர்கள் போல் முஸ்லிம் அறிஞர்கள் எவரும்
இவரை சந்திக்க முயல்வதில்லை. முயன்றால் முஸ்லிம்கள்
முன்னேற்றத்துக்கு இவர் மிகவும் பயனுள்ள பல நல்ல
காரியங்களை விரைவில் செய்து தருவார் என்பது
எனது அசைக்க முடியாத நம்பிக்கை.

ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக, முதன் முறையாக
பதவி ஏற்ற நேரம் அது. தினத்தந்தி பத்திரிகை என்னிடம்
அவர் பற்றி ஒரு கட்டுரை தருமாறு என்னை கேட்டது.
ஜெயலலிதா பற்றி நான் எழுதிய அந்த கட்டுரையை
என் நண்பர்கள் பலரும் விரும்பியதின் பேரில்
இங்கு பதிவு செய்வதில் மிகவும் மகிழ்கிறேன்.



  




Friday, June 22, 2012

MARRY TO DIVORCE

விவாக - ரத்தாகும் திருமணம்

சென்னையில் விவாக-ரத்தாகும் திருமணங்களின் எண்ணிக்கை
கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவது மிகவும்
கவலை அளிக்கும் விஷயம்.
கணவன் மனைவி இருவரும் சம்மதித்து பிரிவதென்று
முடிவு எடுத்து விட்டால் விவாக-ரத்து பெறுவது
மிகவும் எளிது.
விவாக-ரத்து கேட்பவர்களில் பெரும்பாலானவர்கள்
மிகவும் இளம் வயதினர்.
அதிகம் பேர் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.
தற்போது 25 சதவீதம் திருமணங்கள்
விவாக-ரத்தில் முடிகின்றன.
கேரளத்துக்கு பின்னர் தமிழ்நாடு
இதில் முன்னிலை வகிக்கிறது.
இதில் படித்தவர்கள் அல்லது படிக்காதோர்
என்ற பாகுபாடு இல்லை.
காதல் திருமணங்கள் தான் என்றில்லை
பெற்றோர் பார்த்து முடித்து வைத்த திருமணங்களும்
இப்போது விவாகரத்தை நோக்கியே அடிஎடுத்து
வைக்கின்றன.காரணம் புரியாமல் நீதி அரசர்களும்
சமூக ஆர்வலர்களும் திகைக்கின்றனர்.
இதனால் குடும்பங்கள் பாதிப்பதை விட
தம்பதியினரின் குழந்தைகள் தான் அதிகம்
பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
இந்த பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகள்
தன்னம்பிக்கை இழந்தவர்களாகவும் மனச்சோர்வால்
ஒரு வித பயத்துடனும் மன உளைச்சலுடனும்
பாதுகாப்பற்ற சூழலில் வாழும் நிலைக்கு
தள்ளப்படுவதால் அவர்களின் வாழ்க்கை தரமும்
சிதைந்து சீர் கெட்டு விடும்.
மாறி வரும் நவீன புதுமை உலகில்
திருமணம் ஒரு கேள்விக்குறி ஆகிவிட்டது.
திருமணம் ஆகாமலே சேர்ந்து வாழும் உரிமை
இதை இன்னும் எளிதாக்கி விட்டது.
 திருமணம் ஒரு புனித பந்தம் ,அது கருத்து ஒருமித்து வாழ 
வகை செய்யும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம் என்ற கருத்து 
தம்பதியர் இடையே ஏற்படுமானால் விவாக-ரத்து 
தவிர்க்க படலாம்.விரிசல் சீர் படலாம்.
அழகுக்காக செய்யும் திருமணம் 
அழகு குறைந்தால் மாறி விடும்.
பணத்துக்காக செய்யும் திருமணம் 
பணம் போனால் பறி போய் விடும்.
பதவிக்காக செய்யும் திருமணம் 
பதவி போனால் பறந்து விடும் 
புகழுக்காக செய்யும் திருமணம் 
புகழ் குறைந்தால் மறைந்து விடும் 

"கல்யாணம்,கச்சேரி,கொண்டாட்டம்  எல்லாமும் வேடிக்கை நமக்கு 
அதில் வேறென்ன இருக்கு - டேக் இட் ஈஸி"
நடிகர் கமலஹாசன் ஒரு படத்தில் பாடி நடிப்பார்.
இந்த கருத்து உள்ளவர்கள் திருமணம் புரிந்து 
கொள்ளாமல் இருப்பது இன்றைய கால கட்டத்தில் 
மிகவும் நன்மை பயக்கும்.


BELIEVE THAT YOU CAN'T DIVORCE YOUR PARENTS OR CHILDREN
IT IS BETTER TO DIVORCE  BEFORE MARRIAGE THAN AFTER MARRIAGE.
IT IS FAR BETTER TO DIVORCE
BEFORE BEARING CHILDREN THAN
AFTER CHILDREN ARE BORN.
LOVE IS POSSIBLE WITHOUT PARENT'S CONSCENT
SEX IS POSSIBLE WITHOUT PARENT'S CONSCENT
MARRIAGE IS NOT POSSIBLE WITHOUT PARENT'S CONSCENT.
AFTER ALL, YOU ARE NOTHING BUT
THE BLOOD, BONE AND FLESH OF YOUR PARENTS.
LIVING-IN-ARRANGEMENT MAY GIVE
SHORT-TERM RELIEF, BUT
LONG-TERM GRIEF.
IF THE INTENSION  OF THE MARRIAGE IS TO DIVORCE
EVEN GOD CAN'T PREVENT IT.



Tuesday, June 19, 2012

ABDUL KALAM - A SAINT OR A SCIENTIST

அப்துல் கலாம்

விஞ்ஞானி ஆன ஒரு ஞானி


அப்துல் கலாம் -  இந்த மனிதரை பற்றிய எனது கருத்துக்களை அல்லது எண்ணங்களை என் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பல முறை நான் விரும்பியதுண்டு.சில நண்பர்களுக்கு என் கருத்துக்களில் உடன்பாடு இல்லை என்பது எனக்கு தெரியும்.இந்த மாமனிதர் என்னை கவர்ந்து விட்டவர் என்ற காரணம் ஒன்றே இவரை பற்றி நான் எழுதுவதற்கு காரணமாக அமைந்தது என்று சொன்னால் அது மிகை அல்ல.

ஒரு மனிதனை பற்றி எழுதுவது என்றால் அவனால் இந்த மனித சமுதாயம் பயன் பெற்று இருக்க வேண்டும், அல்லது தான் வாழும் காலத்தில் மக்களுக்கு நல்ல பயனுள்ள கருத்துக்களை - மக்களின் வாழ்க்கை தரும் உயர்வு பெரும் நல்ல செயல்களை அவன் செய்திருக்க வேண்டும். இன்றைய இளைய தலைமுறையினரின் நாயகனாக, ஒரு 'ரோல் மாடலாக' இந்த முதிய இளைனர் விளங்குகிறார் என்பதே அவர் செய்து வரும் நற் செயல்களுக்கு ஒரு நற் சான்று.

ஒரு எளிய முஸ்லிம் தமிழ் குடும்பத்தில் பிறந்து ஒரு நாடறிந்த விஞ்ஞானியாக தன்னை உயர்த்திக்கொண்ட வரலாறு பற்றி நான் இங்கு விவரிக்க போவதில்லை. தன்னிகரற்ற அறிவியல் சாதனைகளால் 'பாரத ரத்னா' என்ற உயர் தேசிய விருதினை பெற்றது கூட கலாமை பொறுத்த வரையில் ஒரு பெரும் சாதனையில்லை. விண் விளி சாதனைகள் நிகழ்த்தி
"அக்னி நாயகனாக" அவர் உலா வந்தது கூட அவரை பொறுத்த வரை ஒரு சாதாரண நிகழ்ச்சியே ஆகும்.

அசாதாரமான  சாதனைகளை உலகின் முன் நிகழ்த்தி காட்டிய இந்த அசாதாரமான மனிதன்  தன்னை எப்போதுமே ஒரு  சாதரணமான  மனிதனாகவே  காட்டி கொண்ட  விதம்  என்னை  பல முறை வியக்க வைத்ததுண்டு. சிறிய  வெற்றிகளுக்கு  எல்லாம்  விழா  எடுத்து  மகிழும்  இக்கால  சூழலில்  அபாரமான  அறிவியல்  சாதனைகளை  நிகழ்த்தி  காட்டிய  இந்த  "வெற்றியின் சிகரம்" எப்போதுமே  தன்னை  வெளி உலகுக்கு  அறிமுகம்  செய்து  கொள்ள  ஒரு போதும்  விரும்பியதில்லை.

பதவிகளை  தேடி  அலையும்  இவ்வுலகில்  இந்தியாவின்  உயர் பதவி  இவரை  வலிய  தேடி வந்து  அணைக்க  இருந்த போது, அதன்   செயலை எண்ணி  கலாம்  மிகவும்  நாணம்  அடைந்தார். அன்றைய  பாரத  பிரதமர்  அவர்களே  இவரை  தேடி  வந்து  "ஜனாதிபதி  பதவி" யை  ஏற்று கொள்ளும்படி  வற்புறுத்திய  போது  இவர்  அதை  ஏற்க  மிகவும்  தயங்கினார்.  அழகிய  பெண்களை  கூட ஏறெடுத்து  பார்க்க  தயங்கும்  கலாம்  அவர்களை  'பதவி  தேவதை' தன்  பொன் கரங்களால்  ஆரத்தழுவி  தன்னுடமையாக்கிக் கொண்டாள். ஜனாதிபதி  பதவி  இவரால்  தரம் உயர்ந்தது. பதவி  சுகத்தை  நாடாத  கலாமை கண்டு  பதவி  தேவதை  மட்டுமல்ல - இந்த  நாடே வியந்தது. அரண்மனையின்  நீண்ட  கதவுகள்  சாதாரண  மக்களுக்காக  திறந்து  விடப்பட்டன. ஜனாதிபதி  மாளிகை  சாதாரண  மனிதர்களும்  உலா  வரும்  எழிலகம்  ஆக  உரு மாறிற்று. மக்கள் நாயகனே  மக்களில்  ஒருவனாக  காட்சி  அளித்தது  கண்டு  நாடே வியந்தது. யார் வேண்டுமானாலும், எப்போது  வேண்டுமானாலும்  ஜனாதிபதியை  சந்திக்க  முடியும்  என்ற  கலாமின்  அறிவிப்பு  அற்ப பதவிகளில்  இருப்போரையும்  அதிர வைத்தது. பதவி  சுக வாசிகள்  இந்த அறிவிப்பினால்  மிரண்டு போனார்கள். "மக்கள் எவ்வழி, மன்னன்  அவ்வழி" என்ற பொன் மொழிக்கு  இணங்க, ஜனாதிபதியே  மக்களை  நோக்கி  நடந்த காட்சி  இந்திய  வரலாற்றில்  முதல்  முதலாக  அரங்கேறியது. நேற்று பெய்த மழையில்  இன்று  வளர்ந்த  காளான்  தலைவர்கள்  எல்லாம்  கலாமை  பார்த்து  பயந்தார்கள். எங்கே, மக்களும்  தங்களை  கலாம்  போல்  இருக்க  சொல்வார்களோ - ஒரு வேளை  அப்படி  சொன்னால் என்ன  செய்வது  என்று  மூளையை  பிசைந்தார்கள். அப்துல் கலாம் - இந்திய  திரு நாட்டிற்கு  கிடைத்த  ஓர்  அற்புத தலைவர்.

கலாம் மிகவும் எளிமையாக இருப்பதற்கு காரணம் என்ன? அவர் "ஜனாதிபதி" போல் வேஷம் கூட போடவில்லை. சாதாரண  கலாமாகவே  தன்னை  எண்ணிக்கொண்டார். ஏன் - ஒரு விஞ்ஞானி  என்று கூட தன்னை பெருமைப்பட அவர்  கூறி கொண்டதில்லை. பதவிகளின்  பெயரால் என்றுமே அவர் தன்னை அடையாளம் காண  முயன்றதில்லை.அவரின்  எளிமை கோலத்தை கூட கிண்டல் செய்து  மகிழ்ந்தவர்கள் பலர். அவரின் நடை உடை பாவனைகளை கேலி சித்திரமாக்கி பிரசுரித்து மகிழ்ந்தவர் சிலர். தன்னை அறிந்து கொண்டவர்கள் பிறரின் விமர்சனம் கண்டு மனம் கலங்குவதில்லை. கலாம் 21-ம் நூற்றாண்டின் "சாக்ரடீஸ்" ஆக வலம் வந்தார். இளைனர்களை தட்டி எழுப்பினார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் இளைஞர்கள்,மாணவர்கள் அதிக அளவில் குவிந்தனர். அவரின் கருத்துரைகளை ஆவல் பெருக கேட்டு மகிழ்ந்தனர். கோடிக்கணக்கான இளைனர்களின் மாடல் தலைவனாக அவர் உயர்ந்தார். இளைனர்களுக்கு சிந்திக்கவும் ஆக்க பூர்வமான கனவுகளை வளர்த்து அதை செயல் படுத்தும் கலைகளையும் கற்றுக் கொடுத்தார். முன்னாள்  ஜனாதிபதி என்ற போலி அந்தஸ்துக்குள் தன்னை அடைத்துக் கொள்ள விரும்பாமல் கலாமாகவே மக்கள் மத்தியில் வலம் வந்தார். நம் நாட்டு கல்லூரி,பல்கலைகழகம் என்றில்லாமல் வெளி நாட்டு கல்லூரிகளும்,பல்கலைகழகங்களும் இவரை போட்டி போட்டு அழைத்து கெளரவித்தன. இவர் வாங்கி குவித்த "டாக்டர்" பட்டங்களுக்கு அளவே இல்லை. கலாம் என்றால் கர்வம் இல்லாதவர் என்பது மக்களின் ஒரு மித்த கருத்தாகும்.

முஸ்லிம்கள் மத்தியில் கலாம் பற்றி பல்வேறு கருத்து பேதங்கள் உண்டு. அது பற்றி விளக்க முற்படுவது என் நோக்கமல்ல. பி.ஜெ.பி.தேர்வு செய்வதால் மட்டுமே இவர் முஸ்லிம்களுக்கு எதிரி ஆகி விட முடியாது. இது சுயநலம் கொண்ட சில முஸ்லிம் அரசியல் கட்சிகளின் கடைந்தெடுத்த பெரும் பொய் கூற்றாகும். இந்திய அரசியலில் கலாம் போன்ற நேர்மையான முஸ்லிம்கள் பெரிய பதவிகளை அலங்கரிக்கும் போதெல்லாம் இந்த "சந்துமுனை சிந்துபாடிகள்" முஸ்லிம் அமைப்புகள் என்ற பெயரில் இல்லாத-பொல்லாத அவதூறுகளையெல்லாம்  முனைந்து நின்று பரப்ப துணிவது கண்டிக்கத் தக்கது. கலாம் இந்த அவதூறுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட ஓர் உயர்ந்த மனிதர்; மனிதப் புனிதர்.இளகிய மனமும்,ஏழைக்கு இறங்கும் மனப்பாங்கும் கொண்ட ஓர் ஏழை பங்காளர். தன் பெயருக்கு தகுந்தாற்போல் 'திருமறையை' நன்கு கற்றுணர்ந்து அதை வாழ்க்கையில் கடைபிடிக்கும் ஒரு சிறந்த முஸ்லிம் அவர். விஞ்ஞானியாக இருந்தும் ஞானி போல் வாழ்பவர்.

இந்திய திருநாடு இன்று ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. நேர்மையான நல்ல தலைவர்கள் இன்று நம்மிடையே இல்லை. இருக்கும் ஒரு சில தலைவர்களும் நேர்மையானவர்கள் என்று சான்று பகரும் நிலையில் இல்லை. சினிமாக் காரர்களின் கைகளில் அரசியலும் நாடும் சிக்கி சீரழிந்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த வரையில் அரசியல் தலைவர்கள் எல்லாம் சினிமா நடிகர்களாக அல்லது திரை  கதை-வசன கர்த்தாக்களாக இருப்பவர்களே உள்ளனர். அரசியல் தலைவர்கள்  எல்லோரும் நம் தமிழ் நாட்டில் சினிமா உலகில் இருந்தே வருகிறார்கள். பெரும்பாலான கட்சிகளின் தலைவர்கள் சினிமா கலைனர்களே. தமிழ் நாட்டை சேர்ந்த  கலாம் ஒரு சினிமா கலைனர் அல்ல. நேர்மையான  முதிர்ந்த  'நேஷனல்  லீடர்'. அவரே மீண்டும் ஜனாதிபதியாக பொறுப்பு வகிக்க வேண்டும்  என்று பொறுப்புள்ள  அரசியல் கட்சி பிரமுகர்கள்  அனைவரும் வேண்டுகோள் விடுத்தும், பதவி வலிய வந்து  மீண்டும் வீட்டு  கதவை பலமுறை  தட்டியும், ஆசைக்கு பணியாமல் சொந்த மன சாட்சிக்கு பயந்து, பதவியை தூக்கி எறிந்த கலாம் என் கண் முன் உயர்ந்து நிற்கிறார். 
சங்கு சுட்டாலும் வெண்மை தரும் 


Monday, June 18, 2012

MARRIAGES ARE MADE IN HEAVEN

திருமணங்கள் சொர்க்கத்தில்

நிச்சயக்கப்படுகின்றன

இந்த பொன்மொழி உண்மையா அல்லவா என்பது
நம் விவாதமல்ல; ஆனால் இது பொன் மொழியும் அல்ல
பழமொழியும் அல்ல என்பதே நம் கருத்து.
இப்போது திருமணங்கள் இன்டர்நெட் மூலம்
நிச்சயம் செய்யப்படுகின்றன என்பதே முழு உண்மை.
திறமையும் சற்று ஏமாற்று திறனும் இருந்தால் ஒரு
நோஞ்சான் கூட எத்தனை பெண்களை வேண்டுமானாலும்
இப்போது மணம் புரிய இயலும்.
அமீர்கான் என்ற ஒரு மும்பை பேர்வழி 50 பெண்களுக்கு மேல்
ஏமாற்றி திருமணம் புரிந்து கொண்டான் என்பது செய்தி அல்ல
ஒரு முழு அதிர்ச்சி. இவன் பேச்சில் மயங்கி இவனை
மணந்தவர்கள் 150- கும் மேல் நீளும் என்கிறது இன்றைய செய்தி.
பெரும்பாலான பெண்கள் மெத்த படித்தவர்கள்.
சில பெண்கள் பெற்றோரையும் புறம் தள்ளி விட்டு 
இவன் பேச்சில் மயங்கி திருமணம் புரிந்து, ஹனிமூன் முடிந்து 
கணவன் - மனைவியாய் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பது 
நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் இது 
முழுக்க முழுக்க உண்மையாகும்.
மணம் புரிய இருக்கும் பெண்களை இவன் தேர்வு 
செய்யும் முறை மிகவும் அலாதியானது.
குடும்ப பிரச்சினை உள்ள பெண்கள் 
குடும்ப சுமை உள்ள பெண்கள் 
பெற்றோரை விட்டு விலகி இருக்கும் பெண்கள் 
கணவனால் கை விடப்பட்ட பெண்கள் 
இளம் விதவை பெண்கள் 
சற்று வயதான பணக்கார பெண்கள் 
எளிதில் இவன் விரிக்கும் வலையில் வீழ்கின்றனர்.
இவன் வலை விரிப்பது இருக்கட்டும் 
இவன் வலையில் இந்த பெண்கள் எப்படி இவ்வளவு 
எளிதாக விழுகின்றனர்.
வாழ்வு கேள்விக்குறியாகும் என்று உள்ளுணர்வு உணர்த்தியும் 
இந்த விபரீத விளையாட்டில் இந்த இளம் பெண்கள் 
இறங்குவது ஏன்?
தேவை ஒரு ஆண் துணை என்பதாலா?
வெறுமையாகிவிட்ட தங்கள் வாழ்வில் வசந்தம் 
மீண்டும் வீசும் என்பதாலா?
கேள்விக்குறி ஆகிவிட்ட தங்கள் வாழ்க்கையை 
மீண்டும் சீர் செய்ய இயலும் என்பதலா?
பிரிந்து வாழும் கணவனை தண்டிப்பதற்காகவா?
அல்லது எளிதில் விவாக ரத்து பெற்று 
விடலாம் என்ற தைரியத்தாலா ?
திருமணத்தை ஒரு வேடிக்கை - விளையாட்டாய் 
எடுத்து கொண்ட காரணத்தாலா?
"காதல் என்பது எது வரை 
கல்யாண காலம் வரும் வரை, 
கல்யாணம் என்பது எது வரை 
கழுத்தில் தாலி விழும் வரை"

எங்கேயோ, எப்போதோ கேட்ட பாடல் வரிகள் 
அர்த்தம் அன்று புரியவில்லை 
இன்று புரிகிறது.