Wednesday, March 21, 2012

THE ART OF TEACHING LOVE - tamil

மன்மத கலைக்கல்வி


'மன்மத லீலையை வென்றார் உண்டோ'
ஒரு காலத்தில் பாகவதர் ஆண்களை குறிவைத்து பாடிய பாடல்
ஆண்களை கூட சற்று முகம் சுளிக்க வைத்தது.
"மன்மத லீலை" என்ற படத்தை, பாலச்சந்தர் எடுத்த போது கூட
நம் சமூகம் அவரை சாடியது. என்றாலும், தற்போது  கூடங்குளம் அணு உலை
செய்திகளை காட்டிலும் நம் மீடியாக்களை அதிகம் ஆக்ரமித்த செய்தி
நமது பெருமைக்குரிய ஆசிரிய சமூகத்தை சேர்ந்த ஒரு மூத்த ஆசிரியை 
குமுது அம்மையார் அவர்களை பற்றி வந்த செய்தியாகும்.
வயதுக்கு வராத ஒரு இள மாணவனும் இதில் சம்பந்த பட்டிருப்பதால் 
இந்த விஷயம் சற்று முக்கியத்துவம் பெறுகிறது.


37 வயது ஆசிரியை 17 வயது மாணவரை கடத்தி, காதல் வயப்பட்டு
உல்லாச கடலில் மூழ்கியது எப்படி. ஆசிரியை போலீசாரிடம் கொடுத்த
பரபரப்பு வாக்குமூலம், போலீசாரை மட்டுமல்ல, பொதுமக்களையும்,
ஆசிரிய பெருமக்களையும், தாய்மார்களையும், குறிப்பாக இள வயது
மாணவர்களையும் நிலைகுலைய செய்து விட்டது.

இந்தி ஆசிரியை அவர். திருமணமானவர்.ஒரு குழந்தைக்கு தாய். கணவனை பிரிந்து வாழ்பவர். இந்த குறிப்பிட்ட மாணவனை அவருக்கு மிகவும் பிடிக்கும். கட்டிபிடி காதலில் தொடங்கி, அந்தரங்கமாகி, கட்டில் கடந்து 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்ற நிர்வாண நிலைக்கு தங்களை உயர்த்தி கொண்டவர்கள்  இந்த காதலர்கள்.மாணவன் படிப்பதோ பிளஸ்-1 வகுப்பு. வயதோ 17 . ஆசிரியை சொல்கிறார்- "என் காதலனை பார்க்கும்போது,என்னை ஒரு 16  வயது மாணவியை போல் மனதில் எண்ணி கொள்வேன்,செக்ஸ் ரீதியாக இணையும் நிலையில் நான் பரவசம் எய்தியதுண்டு" சற்று குரூரமாக தோன்றினாலும் அவரது வாக்குமூலம் சமூக ஆர்வலர்களை எல்லாம் சிந்திக்க தூண்டாமல், செயல் இழக்கும் நிலைக்கு தள்ளி விட்டது. அவர் மேலும் தரும் தகவல் தமிழ் சமூகத்தை தலை கீழாக புரட்டி போட்டு விட்டது. அவர் சொல்கிறார்.
"எனக்கு எதை பற்றியும் கவலை இல்லை. எங்கள் காதலை வாழ விடுங்கள். இனி என் கணவர் எனக்கு தேவை இல்லை. என் இளம் காதலன் தான் எனக்கு வேண்டும்.வாழ்ந்தால் இனி அவனோடு தான் வாழ்வேன், இல்லையேல் செத்து மடிவேன்."
இளம் மாணவன் சொல்வதை இப்போது சற்று கேளுங்கள். "ஆசிரியை தான் என் உயிர் காதலி, அவரை திருமணம் செய்து வாழ என்னை அனுமதியுங்கள்.சட்டத்தை பற்றி எனக்கு கவலை இல்லை.இந்த உலகை பற்றி, பெற்றோர்,உற்றார்,உறவினர் பற்றி எனக்கு கவலை இல்லை. வாழ விடுங்கள், இல்லையேல் சாக விடுங்கள் அல்லது சாவிலாவது இனைய விடுங்கள்"


                                   
இந்த காதலனை அடைய கணவனை நிரந்தரமாக பிரிய தயாராக
இருப்பதாகவும், தன் ஒரே மகனையும் தன் தந்தையுடன் அனுப்பி விட
இருப்பதாகவும் இந்த வயது முதிர்ந்த காதலி சொல்கிறார்.


பொருந்தா காதல் உறவுக்குள் சிக்கிய இந்த புதுமை காதலர்களை
எப்படி மீட்பது என்பது தான் இருவர் குடும்பமும் கொண்டுள்ள கவலை.
ஆனால் ஜெயலில் இருக்கும் ஆசிரியை, எதையும் கண்டு கொள்ளாமல்
மிகவும் சந்தோசத்துடன் இருப்பதாகவே சிறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.

மதவாதிகளை கேட்டால் 'கலிகாலம்' என்பர். அல்லது உலகம்
அழிவதற்கான காலம் நெருங்கி விட்டதின் அறிகுறி என்பர்.
மன நல வல்லுனரை கேட்டால் இது ஒரு சாதாரண
'SEXUAL PERVERSION'
உடல்,மன ரீதியான செக்ஸ் கிளர்ச்சி அல்லது எழுச்சி என்பர்.
மருத்துவரை கேட்டால்
SOME CHANGES IN THE BLOOD CHEMISTRY OR HORMONES
மூளையின் செக்ஸ் சென்டரில் ஏற்பட்ட மாறுதல் என்பர்.
செக்ஸ்சாலஜிஸ்ட்-ம் கேட்டால் கணவரோடு உறவு சரியாக இல்லாததால்
ஏற்பட்ட கோளாறு இது. மனைவியை திருப்தி செய்ய இயலாத கணவராக,
அவர் இருந்தால், இது போல் நிகழ வாய்ப்பு அதிகம். எனவே
இதில் பெரிய தவறு ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை என்று
மிகவும் எளிதாக சொல்லி விடுவார்.

ஆண் குழந்தைகள் சாதாரணமாகவே 'தாயன்புக்காக' ஏங்குவதுண்டு.
சில நேரங்களில் வெறுப்பை, குழந்தைகளின் மேல் திணிக்கும் சில
தாய்மார்களும் உண்டு. தாயின் அன்புக்காக ஏங்கி தவிக்கும் ஆண்
குழந்தைகள், தங்கள் மேல் பாசம் சொரியும் 'தாய் போன்ற' ,தாய் வயதை
ஒத்த ஆசிரியைகளிடம் தங்கள் மனக்குறையை வெளி இடுவது
உண்டு.இந்த நெருக்கம் சில வேளைகளில் காதலாக கனியவும் 
வாய்ப்பு உண்டு. அழகிய ஆசிரியைகள் இந்த சந்தர்பங்களை 
தவறாக பயன்படுத்தி, தங்கள் இச்சைகளை தீர்த்து கொள்வதற்கு 
இளம் மாணவர்களை தூண்டுவதும் உண்டு.

கலீல் ஜிப்ரான் ஒருமுறை சொன்னார்.
"பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்றுங்கள்"
வயதான ஆசிரியைகளிடம் இருந்து இளம் மாணவர்களை 
காப்பாற்றுவது எப்படி. 




Friday, March 16, 2012

HOW TO SAVE THE CHILDREN FROM THEIR PARENTS

குழந்தைகளின் பெற்றோர்களிடம்  இருந்து
குழந்தைகளை பாதுகாப்பது எப்படி.


இப்போதெல்லாம் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி பேசுவதற்காக
குழந்தை மருத்துவ நிபுணர் என்ற முறையில்
பெரும்பாலான கல்வி நிலையங்களில் என்னை 
பேசுவதற்கு அழைத்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரு சிறு குழந்தை சில நாட்கள் முன்பு ஒரு பழ துண்டை 
விழுங்கி, அது தொண்டையில் அடைத்து விட்டதன் காரணமாக குழந்தை
இறந்து விட்டது. இது சென்னையில் உள்ள ஒரு பிரபல பள்ளியில் 
நடந்த சம்பவம். குழந்தைகளுக்கு இப்போது பாதுகாப்பின்மை 
மிகவும் அதிகரித்து விட்டது. குழந்தைகளை பாதுகாப்பவர்களே, 
குழந்தைகளின் எமனாக மாறி கொண்டு இருக்கிறார்கள்.

குழந்தையின்மை சிகிச்சைக்காக, சென்னையில் இப்போது அதிக 
அளவில் மருத்துவ மனைகள் பெருகி விட்டன. குழந்தை இல்லா
தம்பதியர் எப்படியும், எந்த முறையிலாவது ஒரு குழந்தையை பெற்று 
கொள்ள, துடித்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் குழந்தை பெற்ற 
தம்பதியினரோ, அதை முறையாக பாதுகாக்க வழி தெரியாமல், 
குழந்தைகளை இழந்து விடுகின்றனர். சில நேரங்களில், சுயநலம் 
காரணமாக பெற்ற குழந்தைகளையும் கொன்று விடுகின்றனர். 




மேற்சொன்ன செய்தி 'தினதந்தி' பத்திரிகையில் வந்த தகவல்.
மதுவுக்கு அடிமையான குழந்தையின் தாத்தா தான், குழந்தையை
கடத்தி அதை வேறு ஒரு கும்பலுக்கு விற்க துணிந்தவர் என்று
அறியும்போது, ஒரு குழந்தை மருத்துவர் என்ற முறையில் மனம்
சற்று பேதலிக்கிறது. மருத்துவ சிகிச்சை பயனின்றி, குழந்தை
இறந்தால் கூட அதையும் சிகிச்சை அளித்த மருத்துவரின்
கவன குறைவு என்று சாடும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை
தாங்களே விலை பேசுவதை என்னென்று சொல்வது.




பிறந்து நான்கு நாட்களே ஆன ஒரு ஆண் குழந்தை
குப்பை தொட்டியில் வீசி எறியபட்டது.





இந்த சம்பவத்திலும் குழந்தையின் தாத்தாவுக்கு தொடர்பு
இருக்குமோ என்ற ஐயம் போலிசுக்கு எழுந்துள்ளது.





தாயின் கவன குறைவால் நடந்த துயர் சம்பவம் இது.



மொபைல் பேசும் அவசரத்தில் தந்தை  குழந்தையை காருக்குள்
வைத்து பூட்டி விட்டு சென்றதால் குழந்தை மூச்சு திணறி 
இறந்து விட்டது.

இப்போது சொல்லுங்கள். குழந்தைகளை அவர்களின் 
பெற்றோர்களிடம் இருந்து காப்பது எப்படி. 






THE NEWAGE YOUNG GENERATION - tamil

புது யுகத்தின் இளைய தலைமுறை

இன்றைய இளம் மாணவ சமுதாயத்தை நினைத்தால்
நெஞ்சம் பதறுகிறது. இளைய தலைமுறையின் தாக்கத்தால்
தலை நிமிர்ந்து நிற்கும் இளம் நாடாக இந்திய நாடு
உருவாகி கொண்டிருக்கும் நேரம் இது.
வயது முதிந்தவர்களால் நிரம்பி வழியும் 'சீன நாடு',
நம்மை கண்டு பயம் கொள்வதற்கு காரணமும் இதுவே ஆகும்.
இளம் மாணவ செல்வங்களின் செயல் பாடுகளை, நடத்தை முறைகளை
சற்று உற்று நோக்கினால் அவர்கள் எதை நோக்கி பயணம்
மேற்கொள்கிறார்கள் என்பதை உணர இயலும்.



சேலத்தில் பள்ளி சீருடையுடன் ஒரு பள்ளி மாணவி ஒரு வாலிபருடன்
அலைந்து திரிந்த போது போலீசாரால் மீட்க பட்டபோது, ரோட்டில்
படுத்து உருண்டு அடம் பிடித்த நிகழ்ச்சியை இந்த செய்தி விவரிக்கிறது.





திருச்சியில் தங்கி கல்லூரியில் படித்து வந்த மாணவி தன்
இள வயது காதலனுடன் ஓடி விட்ட அதிர்ச்சி தகவல் இது.




மது அருந்திய போதையில் கல்லூரி மாணவர் தன்
நண்பரையே பீர் பாட்டிலால் தாக்கி கொன்று விட்டாராம்.





மருத்துவ கல்லூரி மாணவர்கள் கூட இப்போது
நூதனமான முறையில் பரீட்சையில் காப்பி அடிக்க
துவங்கி விட்டனர்.

இளைய தலை முறையின் பெருக்கத்தால் நிரம்பி வழியும்
நம் நாடு மாணவர்களின் ஒழுக்கத்தை பேணி காப்பதில்
கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும்
சமுதாய தலைவர்கள் இதில் மிகுந்த அக்கறை காட்ட வேண்டும்.
தவறும் பட்சத்தில் மிகுந்த கலாச்சார சீரழிவை பின்னாளில் நாம்
எதிர் கொள்ளும் சூழல் ஏற்பட வழி வகுக்கும்.





TEACHER - STUDENT AFFAIRS AND THE SHOCK - tamil

ஆசிரியர்  -  மாணவர்  உறவும் அதிர்ச்சியும்

ஆசிரியர்  -  மாணவர் உறவு ஒரு காலத்தில் போற்றி வணங்கப்பட்டது.
இந்நாளில் அந்த உறவு பொய்த்து விட்டது. 
தினந்தோறும் வரும் செய்திகள், அதிர்ச்சி  தகவல்களை
தரும் போது எல்லோர் மனமும் அதிர்கிறது. 
ஆசிரியர்களின் ஒழுக்கம் கெட்டு போக காரணம் என்ன.







மேற் குறிப்பிட்ட சம்பவங்கள் அனைத்தும் இரண்டு அல்லது
மூன்று நாட்கள் இடை வெளிக்குள் வெளிவந்த செய்திகள் ஆகும்.
இது போன்ற சம்பவங்கள் தினம் தோறும் நடைபெறுவது
ஒரு சாதாரண விசயமாக தோன்றவில்லை.
தமிழகத்தின் கலாச்சார பண்புகள் எந்த அளவுக்கு சீர் கெட்டு
விட்டது என்பதையே இவை படம் பிடித்து காட்டுகின்றன.
வேலியே பயிரை மேய்வது போல், நல்வழி காட்டும் ஆசிரிய
பெருமக்களே மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்து
சென்றால், இளைய சமுதாயத்தை நல் வழி படுத்துவது எப்படி.

PREVENTION IS BETTER THAN CURE.

Thursday, March 8, 2012

MOTHER AND THE MOTHERHOOD - tamil

தாயும் தாய்மையும்


தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது என்றுரைத்தார்
நபிகள் நாதர்.
மனைவியை கூட 'அம்மா' என்று அழைப்பதில் தவறில்லை,
என்று சொன்னார் காந்தி அடிகள்.
அமெரிக்க பெண்களை 'தாயே' என்று அழைத்து பெண்களின் சிறப்பை
உலகுக்கு உயர்த்தினார் சுவாமி விவேகானந்தர்.
தாய் நாட்டை 'தந்தை நாடு' என்று உலகுக்கு அறிமுகம் செய்தான்'
துருக்கியின் தந்தை -  அடா டர்க்.
ஆனால் நாமோ நம் நாட்டை 'தாய் நாடு' என்று அழைத்து,
பெருமை கொள்கிறோம். பெண்களை மதிக்கும் நாடு நம் நாடு.
"தாயில் சிறந்த கோவில் இல்லை " என்பது தமிழ் பண்பாடு.

சர்வதேச மகளிர் தினத்தை போற்றும் இந்த நாளில் மகளிர் பற்றி 
வந்த சில செய்திகள் மனதை பதற வைக்கிறது.










இதில் அதிர்ச்சி என்னவென்றால் இந்த சம்பவங்கள் அனைத்தும்
மகளிர் பற்றி இன்றைய தினம் வெளிவந்த பத்திரிகை செய்திகள்.

தாயையும், தாய்மையையும் நாம்  இன்றும் போற்றி பாதுகாத்து
வருகிறோம்.தந்தை தவறு செய்தால் கண்டுகொள்ளாமல் விட்டு விடும்
குழந்தைகள், தாயின் சிறு தவறுகளை கூட தவறியும் வெளியில்
சொல்வதில்லை. எந்த மகனுமே தன் தாய் நெறி தவறாதவள், நேர்மையானவள்
மிகவும் தூய்மையானவள்,இறை பக்தி மிக்கவள் என்றே மனதில் எண்ணி
வருகிறான். ஒரு கெட்ட மகன் கூட தன் தாயை உயர்வாகவே எண்ணி
மகிழ்கிறான். தாய் தவறு செய்தாலும் அதை மூடி மறைக்கவே விரும்புகிறான்.
பெரும்பாலான குழந்தைகள், தாயின் குண இயல்பிலேயே தங்களை
வெளிப்படுத்தி கொள்ள விரும்புகின்றன.
தந்தை குடித்தால் அதை ஏற்று கொள்ளும் குழந்தைகள், தாய் குடித்தால்
மிரள்கின்றன.தாய் திருடினால் வெட்கப்படுகின்றன. வேறு நபருடன் சிரித்து
பேசினாலோ அதன்  மனம் பேதலித்து விடுகிறது. தன் தாயை பற்றி
கொண்டிருந்த உயர்வான நம்பிக்கைகள் தகரும் போது, அது ஏற்படுத்தும்
மனவலியை குழந்தைகளால் பொறுக்க இயல்வதில்லை. தன் தாய் கெட்டவள்
என்று உணரும் குழந்தை மற்ற பெண்களையும் இதே கண்ணோட்டத்துடன் காண
துவங்குகிறது. தாயின் மீது கொண்ட நம்பிக்கை தகரும்போது, மற்ற பெண்கள்
அனைவரையும் சந்தேகத்துடன் உற்று நோக்குகிறது. ஆண் குழந்தைகளால் இந்த 
அதிர்சிகளை எளிதில் ஜீரணிக்க இயல்வதில்லை. மனதுக்குள் தேங்கி விடும் இந்த 
வடுக்கள், குழந்தை வளர வளர  குழந்தைகளின் குண இயல்பிலும், நடத்தையிலும் 
பெரும் மாறுதல்களை விளைவித்து விடுகின்றன. பின்னாளில் வளர்ந்த 
இளைனர்களின் மண வாழ்விலும்
 கணவன்-மனைவி உறவிலும் பல விரிசல்கள் ஏற்பட இது வழி 
வகுக்கும். இந்த மனவலிகளில்  இருந்து மீளவே  குழந்தைகள் கூட
"போதை மாத்திரைகளை"
 நாடுகின்றன. வயதுக்கு வரும் முன்பே 'குடிக்கவும்'
துவங்கி விடுகின்றன. போதைக்கு அடிமை ஆகிவிட்டால் திருடவும் கற்று
கொள்கின்றன. குழந்தைகள் கொடிய குற்றவாளிகளாக மாறி விடுவதற்கும்
இதுவே காரணம்.
மேற் சொன்ன செய்திகளில் வரும் பெண்களின் குழந்தைகள், இது போன்ற
பெரும் குற்றங்களை தன் தாய் செய்தாள் என்று அறியும் போது அவர்கள்
மனம் படும் வேதனை, அவர்கள் நடத்தையையும், குண இயல்பையும் - ஏன்
அவர்கள் வாழ்க்கையையே நிர்மூலம் ஆக்கி விடும் என்பதை குற்றம்
செய்யும் தாய்மார்கள் உணர வேண்டும்.





Wednesday, March 7, 2012

TEENAGE AGONIES AND BEHAVIOURAL DISORDERS

டீன் - ஏஜ் மன அழுத்தமும் -  நடத்தை முரண்பாடும்  


SCHOOL MENTAL HEALTH  PROGRAMME
பற்றி  கல்வி அதிகாரிகளுடனும், பேராசிரிய மற்றும் ஆசிரிய பெருமக்களுடனும்  ஒரு குழந்தை மருத்துவ மற்றும் குழந்தை மன நல வல்லுநர்
என்ற அடிப்படையில் நான் அடிக்கடி  கருத்து பரிமாற்றம் செய்வது  வழக்கம்.
மேல் நாடுகளில் நான் பெற்ற அனுபவத்தை விட நம் நாட்டில் நடக்கும்
நிகழ்சிகள் என் திகைப்பை மிகவும் அதிகரிக்க செய்கின்றன.
குழந்தைகள் மற்றும் இளம் மாணவர்களின்
EMOTIONAL AND BEHAVIOUR MANAGEMENT
பற்றி இளம் மாணவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும்,பெற்றோர்களுக்கும்
பள்ளிகளில், கல்லூரிகளில் இலவச பயிற்சி வகுப்புகளை
HABIB CHILD AND TEENAGE CLINIC
சார்பில் இப்போது நடத்தி வருகிறோம். பெரும்பாலான பள்ளிகள்
மற்றும் கல்லூரிகள் இப்போது இதில் அதிக அளவில் ஆர்வம் காட்டுவது
அவர்களின் பொறுப்புணர்வை எடுத்து காட்டும் செயல் என்று,
நான் கருதுகிறேன். சமீபத்தில் கூட இந்த விழிப்புணர்வு முகாமை
சென்னையின் பிரசித்தி பெற்ற சில  பள்ளிகளில் நாங்கள் நடத்தினோம்.
பெற்றோர்கள்,ஆசிரியர்கள் மற்றும் இளம் மாணவர்கள்
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து பரிமாற்றம் நிகழ்த்திய விதம்
அவர்கள் எந்த அளவிற்கு மன ரீதியாக,உடல் ரீதியாக,உணர்வு ரீதியாக
பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்பதை உணர வைத்தது.
ரிலையன்சின் 'BIG FM - RADIO' ம் எங்களுடன் இணைந்து
குழந்தை பாதுகாப்பு பற்றிய கேள்வி-பதில் நிகழ்ச்சியை
முழு அளவில் ஒலி பரப்பியது.இந்த நிகழ்ச்சியை சென்னையின்
பிரபல primex scans and labs நிறுவனம் ஏற்பாடு செய்தது.
PARENT CIRCLE என்ற பிரபல  ஆங்கில மருத்துவ மாத இதழ் 
இது சம்பந்தமான எனது மருத்துவ பேட்டியை ஜனவரி மாத இதழில் 
விரிவாக வெளியிட்டது. 

சென்னையில் சமீபத்தில் நடந்த இந்த கொடுமையான சம்பவம்
பெற்றோர்களை,ஆசிரியர்களை,இளம் மாணவர்களை
ஏன் ஒட்டு மொத்த தமிழகத்தையே பெரும்  அதிர்ச்சிக்கு ஆளாக்கி விட்டது.


அளவுக்கு மீறிய மன உளைச்சலும், மன அழுத்தமும் இந்த
மாணவனை கொலை செய்யும் அளவுக்கு தூண்டியிருக்கிறது.
எல்லா பத்திரிகைகளுமே இந்த செய்திக்கு அதிக முக்கியத்துவம்
கொடுத்திருபதின் காரணம் இந்த சம்பவம் ஆசிரிய-மாணவ உறவினை
பெரிதும் பாதிக்கும் என்பதால் தான்.



ஒழுக்கம் இல்லாத கல்வி கடிவாளம் இல்லாத குதிரை போன்றது.
கல்வியும்,திறமையும் ஒருவனை உயர்ந்த இடத்தில அமர்த்தும்.
ஆனால் ஒழுக்கம் தான் அவனை அங்கு நிலை நிறுத்தும்.
திறமை இருந்தும் ஒழுக்கம் இல்லையேல் உயர்ந்த பதவியில்
நீடிக்க முடியாது. தினத்தந்தி பத்திரிகை  இப்படி சொல்கிறது.

அடுத்து வரும் ஒரு செய்தி சுனாமி புயலையும் மிகைக்கும்
வண்ணம் தமிழகத்தையே புரட்டி எடுத்து விட்டது.
குழந்தைகளின் இருபது வருட இளமை காலங்கள் வீட்டிலும்,
பள்ளி மற்றும் கல்லூரிகளில் கழிகின்றன. பெற்றோர்களும், ஆசிரியர்களுமே
அவர்கள் வாழ்கையை  பயனுள்ள வழிகளில், வழி நடத்தி செல்லும் 
ஆசான்களாக திகழ்கின்றனர். அவர்களே ஒழுக்க கேட்டிற்கு வித்திட்டால்
இளைய தலைமுறை என்னாகும்.


37  வயது ஆசிரியை, 17 வயது மாணவரிடம் காதல் வயப்பட்டு
வீட்டை விட்டு ஓடி போய் விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த ஆசிரியை திருமணமானவர்,மேலும்  ஒரு குழந்தைக்கு தாய்.

நம் தமிழ் திருநாட்டில் தினசரி நடக்கும் இந்த அவலங்கள்
எந்த அளவுக்கு நமது கலாச்சாரத்தை சீரழித்து வருகிறது
என்பதை கிழ்காணும் VIDEO பார்த்து புரிந்து கொள்ளலாம்.


அதிர்ச்சி  செய்திகள் -   ஒரு தொகுப்பு

  

நாம் போற்றி பாதுகாத்து வந்த கலாச்சாரம், அன்பு,காதல்,திருமணம்,
ஒழுக்கம்,நடத்தை, மற்றும் குடும்ப உறவுகள் சீர்குலைந்து போக
காரணம் என்ன. சினிமாவா, டி.வி.யா,  இன்டர்நெட்டா அல்லது மொபைலா.

___________________________________________________________________


PARENT CIRCLE 
பிரபல ஆங்கில மருத்துவ மாத இதழில் 
 குழந்தை மருத்துவ நிபுணரும் - குழந்தை மன நல வல்லுனருமான
டாக்டர்.அபிபுல்லா அளித்த பேட்டி.




பிரபல குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர்.அபிபுல்லா
BIG - FM  RADIO - தமிழ் அலை வரிசையில் CHILD-SAFETY 
முறைகள் பற்றி தமிழில் ஆற்றிய கலந்துரையாடலின்
ஒரு பகுதியை நீங்கள்  கேட்டு பயன் பெறலாம்.


  

Tuesday, March 6, 2012

THE CHEATING WIVES - tamil

கணவனை ஏமாற்றும் மனைவியர்

திருமணம் புரிந்த நான்கு நாட்களிலேயே கணவனை
ஏமாற்றி விட்டு மனைவி காதலனுடன்
ஓடி விட்ட கதையை மிகவும் சுவை பட சொல்கிறது
இந்த செய்தி.


"திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கபடுகின்றன"
காலம்- காலமாக நாம் சொல்லி வந்த பொன் மொழிகள் 
பொய்த்து விட்டது ஏன். 




___________________________________________________________________



பெற்ற மகனை கற்பழிக்க தூண்டும் தாய்

"தாயை போல் பிள்ளை -  நூலை போல் சேலை"
ஒரு பழ மொழி நாம் கேட்டதுண்டு.
பெற்ற தாய் -  தந்தை குணம் தான், குழந்தைகளை தொடரும்
என்ற அர்த்தத்தில் தான் அதை நாம் சொல்லி வருகிறோம்.
"தன் மகனை சான்றோன் என கேட்ட தாய்"
பற்றிய செய்திகளை கேட்டு நாம் மகிழ்ந்தது உண்டு.
இங்கே ஒரு தாய் ஒரு இளம் பெண்ணை கடத்தி வர
தன் மகனை பணிக்கிறார். அந்த பெண்ணை கற்பழிக்கவும்
மகனை தூண்டுகிறார். எல்லாம் முடிந்த பின் அந்த பெண்ணை
வெளி மாநிலத்தில் கொண்டு போய் விற்கவும் துணை புரிகிறார்
என்றால் இந்த பெண்மணி தாயா அல்லது பேயா.



_______________________________________________________________________



மகள் நடத்தையும் பெற்றோர் தற்கொலையும்

பெற்ற மகளின் வார்த்தை பிசகினாலே துவண்டு விடும்
பெற்றோர், மகளின் நடத்தையே பிசகினால் என்ன செய்ய இயலும்.


மானமுள்ள பெற்றோருக்கு மரணத்தை தவிர
வேறு வழி இல்லை. என்றாலும் இளைய தலை-முறைக்கு
நன் நடத்தையை, இளமையிலேயே ஊட்டி வளர்ப்பது
இது போன்ற துயர நிகழ்சிகள், நிகழ்  காலத்தில் ஏற்படாமல் 
தடுக்க வழி செய்யும். 




Sunday, March 4, 2012

LOVE AND THE DEATH - tamil

காதலும் சாதலும்

காதல் காதல் காதல்
அது போயின்
சாதல் சாதல் சாதல்.
இதை எந்த கவிஞன் சொல்லி சென்றானோ தெரியவில்லை

காதல் என்பது எதுவரை, கல்யாண காலம் வரும் வரை.
கல்யாணம் என்பது எதுவரை?
இது தான் இப்போது கேள்விக்குறியாகி  விட்டது.
கூடவே கேலிக்குரியதாகவும் ஆகி விட்டது.


கள்ளக்காதல் விவகாரம் இன்றைய தமிழ் சமூகத்தை
ஆட்டி படைக்கும் பெரும் நோய் ஆகிவிட்டது.


மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தால்   மனைவியை கொன்று
தற்கொலை செய்து கொண்ட ஒரு கணவனின் கடிதம், மனைவியின்
அந்தரங்க காதலர்கள் பற்றி விலாவாரியாக விவரிக்கிறது.


கலாசார சீரழிவில் சிக்கினாள் -  துரோகம் செய்தாள்
காதல் மனைவி பற்றி புலம்பும் ஒரு கணவன்.
பெரும்பாலான நோய்களுக்கு தடுப்பு மருந்துகள் உள்ளன.
கள்ளக்காதல் நோய்க்கு தடுப்பு சிகிச்சை என்ன.


போலியோ நோயை இந்தியாவில் முழுமையாக ஒழித்து விட்டோம்.
உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் நமக்கு
சான்று வழங்கியிருக்கிறது.
கள்ளக்காதல் நோயை ஒழிப்பது எப்படி.


திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால் காதலியின்
தாயை வெட்டி கொன்று விட்ட காதலன்.
பெண்ணின் காதலை ஏற்க மறுத்தால் பெற்ற தாய்க்கு
இது தான் தண்டனையா.
இந்த இளைஞ்சர்களை நல்வழி படுத்துவது எப்படி.


இந்த தகவல் சற்று வித்தியாசமானது.
தாய் மகனை கண்டிப்பது நியாயம்.
இங்கு மகன் தாயின் தீய செயலை கண்டு
ஆவேசம் அடைந்துள்ளார். இது தாயின் கள்ளக்காதலனுடன்
சேர்த்து தாயையும் கொலை செய்யும் அளவுக்கு 
மகனை தூண்டியிருக்கிறது. சில நேரங்களில் 
குழந்தைகள் கூட தர்மத்தை நிலை நாட்டுகிறார்கள்.


காதலிக்க மறுத்த காதலியை வெட்டி கொன்ற பின்
காதலரும் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த இளைஞ்சர்களை இந்த காதல் நோயிலிருந்து
காப்பாற்றுவது எப்படி. மேலை நாட்டையும் மிஞ்சும் வண்ணம்
நம் இளைனர்களின் மனோபாவம் பலவீனம் அடைந்து விட்டது.


காதல் கொள்வதை விட காதலித்து கொல்வது
இப்போது நம் நாட்டில் வாடிக்கை ஆகிவிட்டது.
தமிழ் நாட்டில் சாலை விபத்தில் இறப்போர் எண்ணிக்கை
15000 - ஐ தாண்டி விட்டது.
காதல் விபத்தில் இறப்போர் எண்ணிக்கை இதை விட
அதிகரிக்கும் அபாயம் இனி ஏற்படும் போல் தெரிகிறது.









 

OUR BELOVED TEACHERS - tamil

நமது காதல் ஆசிரியர்கள்

ஆசிரியர்களை பற்றி நமது சமுதாயம் மிகவும்  உயர்ந்த
மதிப்பீடுகளை வழங்கி வந்தது. ஆனால் இன்றைய நிலை
தலை கீழாக மாறிவிட்டது.
மாதா-பிதா-குரு-தெய்வம்
என்று தமிழ் சமுதாயம் வழங்கி வந்த கவ்ரவம்
ஆசிரிய பெருமக்களின் செயல் பாட்டினால் தகர்ந்து விட்டது.
பாடம் சொல்லி தரும் ஆசிரியர்கள் இப்போது
வகுப்பு அறைகளில் எதை சொல்லி தருகிறார்கள்.


ஆசிரிய பெருமக்களின் நடத்தை மற்றும் ஒழுக்கம்
இந்த அளவுக்கு சீரழிந்து போனதற்கு காரணம் என்ன.
மாணவர்களின் ஒழுக்கத்திற்கு அரணாக, பாதுகாவலாக
திகழ வேண்டிய ஆசிரியர்கள் இவ்வாறு வேறுபட்டு நிற்பது ஏன்.
இந்த இளைய மாணவ சமுதாயத்தை இது போன்ற
கலாச்சார சீரழிவிலிருந்து காப்பது எப்படி.


_______________________________________________________________



பேராசிரியரின் விபரீத ஆசைகள்


டியூசன் படிக்க வந்த மாணவியை பள்ளி அறைக்கு
அழைத்து உல்லாசம் அனுபவித்த பேராசிரியர்
"தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்"
என்று மாணவியை சக நண்பர்களுக்கும்  விருந்தாக்கிய
இந்த காதகனை காமுகன் என்பதா அல்லது
பிதாமகன் என்பதா.
கல்லூரி பேராசிரிய பெருமக்களை நினைத்தால்
இப்போது நெஞ்சு பதைக்கிறது.


நான் படித்த காலங்களில் எனக்கு கல்வி புகட்டிய அந்த
ஆசிரிய பெருமக்களை இப்போது நினைத்தாலும் மனம்
இன்புறுகிறது.
அந்த கோபுர கலசங்கள் எங்கே, இந்த குப்பை கூளங்கள் எங்கே.
பண்பாடில்லாத பட்டங்களால் பயன் ஏது.
பால் சுரப்பதாலேயே பன்றியின் பால் பசும்பால் ஆகாது.
இவர்களை இனிமேல் எப்படி பேராசிரியர்  என்று அழைப்பது 


Saturday, March 3, 2012

PARENTS AND THEIR TORTURE - dr.habibullah

பெற்றோர்களும் அவர்கள் இளைக்கும் கொடுமைகளும்

பெற்றோர்களால் குழந்தைகளுக்கு பாதுகாப்பா அல்லது
பாதுகாப்பின்மையா.



பெற்றோர்கள் ஏன் தங்கள் குழந்தைகளிடம் இவ்வளவு
கடுமையாக அல்லது கொடுமையாக நடந்து கொள்கிறார்கள்.
பிடிக்காத கட்டாய திருமணத்தை குழந்தைகளின் மீது
பெற்றோர்கள் திணிப்பது ஏன்.



_________________________________________________________________




பெற்ற குழந்தையை விற்ற தாய்

நானே பெற்றேன் -  நானே கொன்றேன்.
பெறுவதற்கு உரிமை இருப்பது போலவே
அதை அழிப்பதற்கும் உரிமை உண்டு.
அந்த நாளில் பராசக்தியில் கலைஞர் எழுதிய வசனம் இது.
கொல்வதை விட விற்பது மேல் என்று
பெற்ற தாய் எண்ணி இருக்கலாம்.


பெண் குழந்தைகளை விலை பேசும் தாய்மார்கள்
மிகவும் கொடுமையானவர்கள்.
குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது என்பது
ஒரு தொழிலை வளர்த்து விரிவுபடுத்துவதற்கு சமம்.
அதற்கு வலுவில்லாதவர்கள் தகுதி பெரும் வரை
குழந்தை பெறுவதை சற்று ஒத்தி போடுவது நன்மை பயக்கும்.




___________________________________________________________________




பெற்ற மகளை கொன்ற தந்தை

குடி போதையில் மகளை அடித்து கொன்று விட்டு
குற்ற உணர்வு தாங்காமல் தூக்கு போட்டு
தற்கொலை செய்து கொண்டார் தந்தை.


குடி -  குடியை  அல்லது குலத்தை கெடுக்கும் என்பர்.
இப்போது குடிப்பவர்கள் போதையில் தங்கள் குழந்தைகளை கூட 
கொன்று விடுகின்றனர். டாஸ்மாக் கடைகளில், காலை நேரங்களில் கூட 
அலை மோதும் கூட்டத்தை பார்த்தால் மனது பதைக்கிறது.
குடித்து விட்டு கார் ஓட்டினால் அபராதம் உண்டு.
குழந்தைகளை,மனைவியரை அடித்து உதைப்பவர்களுக்கு 
என்ன தண்டனை. மது வியாபாரம் செய்யும் அரசு தான் 
முடிவு செய்ய வேண்டும்.



___________________________________________________________________




குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற தந்தை 

மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் இரண்டு 
குழந்தைகளை கொன்று விட்டு தந்தை தற்கொலை.




_______________________________________________________________



கலீல் ஜிப்ரான் சொன்னார்.
"குழந்தைகளை அவர்களின் பெற்றோர்களிடம் இருந்து
முதலில் காப்பாற்ற வேண்டும்"
ஒரு நூறு வருடங்களுக்கு முன் அவர் உதிர்த்த


வார்த்தைகளில் தான் எத்துனை உண்மை.
குடிகாரனை மணக்க சொல்லி பெற்றோர் வற்புறித்தினர்
என்று தன்னை பெற்ற பெற்றோர் மீது மகள்
புகார் தருவது மனதை நெருடுகிறது.










 





NATION AND THE LEADERS

நாடும் நம் தலைவர்களும்

தலைவன் எவ்வழி - மக்கள் அவ்வழி
என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.
மக்கள் பிரதிநிதிகள் மக்கள் பிரட்சினைகளை
எப்படி அலசி ஆராய்கிறார்கள் என்று சற்று உற்று பாருங்கள்


தப்பு செய்யும் குழந்தைகளை, மாணவர்களை தண்டிக்கலாம்.
நம் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களை தண்டிப்பது இருக்கட்டும்,
இவர்களை திருத்துவது எப்படி.
மக்கள் தான் முடிவு சொல்ல வேண்டும்.


__________________________________________________________________



படித்த பெண்களும் பண்பாடும்

பெண்கள் படித்தால் சமூகம் உயரும் என்று எதிர்பார்த்தோம்.
ஆனால் நிலை என்ன



ஆடம்பர வாழ்கைக்கு ஆசைப்பட்டு
நல்ல குடும்பத்தை சேர்ந்த படித்த பெண்கள்
விபசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.
நம் நாட்டின் உச்ச நீதிமன்றம் தரும் அதிர்ச்சி தகவல் இது.



____________________________________________________________________




படித்த பெண்களும் திருமணமும்

கணவரின் குறைவான படிப்பால் அதிர்ச்சி அடைந்த
பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டார்.



கணவர் பத்தாவது வரை படித்தவர் என்ற மன வருத்தம்
மற்றும் தன் அழகுக்கு ஏற்றவராக கணவர் இல்லை என்ற
மனக்குறை தற்கொலைக்கு காரணம் என்று சொல்ல படுகிறது.
பெற்றோர்களின் தவறான முடிவுகளும், அவசரம் கலந்த
திடீர் செயல் பாடுகளும் இது போன்ற திடீர் சாவுகளுக்கு
காரணமாக அமைகின்றன.



____________________________________________________________________





செல் போன் காதலும் திருமணமும்

கண்டவுடன் காதல் கேள்வி பட்டு இருக்கிறோம்.
நவீன உலகில் செல் போன் காதல் மட்டுமல்ல
திருமணமும் அரங்கேறி விடும் நிலை அதிகரித்து விட்டது.


புறா விடு தூது போய்
மிஸ்டு கால் விடு தூது
என்றாகிவிட்டது புதிய காலம்.