Sunday, January 8, 2012

THE IMAGE AND THE MESSAGE

படங்களும் போதனைகளும்

இன்று ஒரு நல்ல தகவலை கேள்வி பட்டேன். அதாவது குழந்தைகளின்
வாசிக்கும் திறன் (READING SKILLS) அதிகரித்து இருப்பதாகவும் பத்திரிகை
செய்திகளை அவர்கள் ஆவலுடன் படித்து அறிவை வளர்பதாகவும்
அதில் குறிப்பிட பட்டிருந்தது. மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஓன்று.
தரமான பத்திரிகைகளில் வரும் செய்திகளை விடுங்கள் - அதில் வரும்
படங்கள் எப்படி இருக்கின்றன. குழந்தைகள் பத்திரிகைகளை படிக்கிறார்களா அல்லது படம் பார்த்து கதை சொல்கிறார்களா



பெண்கள் அணியும் நாகரிக உடைகள் ஆபாசத்தை அள்ளி
தெளிப்பதால் ஆண்கள் வரைமுறைகளை மீறி தகாத செயல்களில்
ஈடுபடுகிறார்கள் என்பது தான் இந்த கட்டுரை தரும் தகவல்.
இந்த கட்டுரையை படிக்க தூண்டும் இந்த படம்
இன்று வெளியான ஒரு தரமான மதிப்பு வாய்ந்த பிரபல ஆங்கில
நாளிதழில் வெளியானது சற்று அதிர்ச்சி தரும் விஷயம் தான்.


சினிமா விளம்பரம்களை பத்திரிகைகளில் அதிகம் பார்த்திருக்கிறோம்
ஆனால் இப்போது வரும் விளம்பரங்கள் கண்களை கூச செய்கின்றன.




மன்மத ராஜா என்றால் என்ன
காமரசம் என்றால் என்ன
மன்மத ராணி என்றால் என்ன
குழந்தைகள் கேட்கும் இந்த அர்த்தமுள்ள கேள்விகளுக்கு
பதில்களை தருவது எப்படி.
தன் மகள் கேட்கும் சிக்கலான இது போன்ற கேள்விகளால்
பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் தாய்மார்கள் தங்கள்
குழந்தைகளின் திடீர் அறிவுத்திறன் கண்டு
கலங்கி போய் நிற்கிறார்கள்.

1 comment:

  1. டாக்டர் ஹபிபுல்லாஹ் அவர்களுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு..

    விழிப்புணர்வு பதிவிற்கு முதலில் ஜசாக்கல்லாஹு க்ஹைரன் கதீரா.

    ஆனால் சில நெருடல்களும் இந்த விழிப்புணர்வு பதிவில் உள்ளன. அவற்றை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள விரும்புகின்றேன்.

    ”..நீங்கள் நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள், பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவன் கடுமையாக தண்டிப்பவன்" - குர்ஆன் 05:02.

    விழிப்புணர்வு ஏற்படுத்தி நன்மையான செயலை செய்தீர்கள். அதேநேரம் ஆபாசமான படங்களை (மீள்)பதிந்து இஸ்லாம் சொல்லாத ஒன்றை, வரம்பு மீறிவிட்டீர்களோ என்று அஞ்சுகின்றேன்.

    //சினிமா விளம்பரம்களை பத்திரிகைகளில் அதிகம் பார்த்திருக்கிறோம் ஆனால் இப்போது வரும் விளம்பரங்கள் கண்களை கூச செய்கின்றன.// - இப்படி கூறிக்கொண்டே அந்த படங்களை பதிந்து நீங்களும் அதே தவறை செய்துவிட்டீர்களே. கண்களை கூச செய்துவிட்டீர்களே..விளம்பரத்திற்காக அவர்கள் ஆபாசத்தை பரப்புகின்றார்கள். நாம் விமர்சனம்/விழிப்புணர்வு என்ற பெயரில் அதனையே செய்கின்றோமோ என்று அஞ்சுகின்றேன்.

    இந்த படங்களை பார்த்து ஒரு சிலரது மனம் சஞ்சலப்பட்டாலும் அதற்கு நீங்கள் தானே பொறுப்பு ஆவீர்கள். விபசாரத்தை நெருங்க கூட வேண்டாம் என்று இஸ்லாம் கூறுகின்றது. நீங்கள் பதிந்துள்ள படங்கள், சிலரை தவறை நெருங்க வைத்து விட்டால் அந்த செயலுக்கு நீங்களே பொறுப்பு.

    படங்களை போடாமல் "தரம் வாய்ந்த பத்திரிக்கைகளே இப்படி ஆபாசமான படங்களை வெளியிடுகின்றன" என்று உங்கள் பாணியில் அழகாக எழுத்து நடையில் விமர்சனம் செய்திருக்கலாம். இந்த படங்கள் இல்லாமலும் பதிவு மிக சிறப்பாகவே அமைந்திருக்கும்.

    இது குறித்து தாங்கள் பிரதிபலித்துக்கொண்டால் அந்த புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக...ஆமீன்..

    உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவுவதாக...ஆமீன்.

    வஸ்ஸலாம்,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ
    http://www.ethirkkural.com/

    ReplyDelete