Tuesday, January 31, 2012

UNITY IN DIVERSITY

வேற்றுமையில் ஒற்றுமை

மனைவி பார்சி,மருமகன் முஸ்லிம், மைத்துனர் யூதர், மைத்துனி கிருத்துவர் - இந்த மத ஒற்றுமைக்கு சான்று பகரும் அதிசய குடும்பத்தின் ஒப்பற்ற குடும்ப தலைவர் தான் திருவாளர்.சுப்பிரமணிய சாமி அவர்கள்.


மத நல்இணக்கத்திற்கு தூதுவராக விளங்க வேண்டிய சாமி அவர்களின் மத துவேச விமர்சனங்களால் வெகுண்டு எழுந்த, அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைகழக மாணவர்களின் ஆர்பாட்டத்தால், ஹார்வர்ட் யூனிவெர்சிட்டி 'சாமி' விசயத்தில் தனது அதிர்ப்தியை வெளியிட்டு இருக்கிறது.


இது இவ்வாறிருக்க, மும்பையில் இருந்து வெளிவரும் நாளிதழில், சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக அவர் எழுதி இருந்த கட்டுரை மத நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவித்து உள்ளதாக அவர் மீது குற்ற சாட்டு எழுந்தது. இதை விசாரித்து தீர்ப்பு வழங்கிய டெல்லி உயர் நீதிமன்றம் சாமிக்கு முன் ஜாமீன் வழங்கினாலும், சில கண்டிப்பான அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கி இருக்கிறது.
"நீங்கள் ஒரு புத்திசாலியான மனிதர்தான்.ஆனால் அர்தமுள்ள சில கட்டுபாடுகளை நீங்கள் பின் பற்றியே ஆக வேண்டும். இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு. எனவே சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினர் உணர்வும் மதிக்க பட வேண்டும்"

நீதிமன்றத்தின் முடிவுக்கு தலை வணங்கிய சாமி, வாதாடுகையில் "எனக்கு முஸ்லிம் உறவினர் உள்ளனர், கிருத்துவ உறவினர்களும் உள்ளனர். என் மனைவியோ பார்சி இனத்தை சார்ந்தவர். இனிமேல் ஒருபோதும் இது போன்று கட்டுரை எழுத மாட்டேன். கோர்ட்டு விதிக்கிற தண்டனையை அல்லது நிபந்தனையை ஏற்று நடப்பேன்" என உறுதி மொழி வழங்கினார்.

மத நல்லிணக்கத்தை ஊட்டி வளர்க்க வேண்டிய ஒரு குடும்ப தலைவன் இப்படி மத துவேசத்தை வாரி இறைப்பது ஏன் என்பது தான் சமூக ஆர்வலர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது. இதற்கு நம் சாமி தான் பதில் சொல்ல வேண்டும்.



No comments:

Post a Comment