Tuesday, January 31, 2012

UNITY IN DIVERSITY

வேற்றுமையில் ஒற்றுமை

மனைவி பார்சி,மருமகன் முஸ்லிம், மைத்துனர் யூதர், மைத்துனி கிருத்துவர் - இந்த மத ஒற்றுமைக்கு சான்று பகரும் அதிசய குடும்பத்தின் ஒப்பற்ற குடும்ப தலைவர் தான் திருவாளர்.சுப்பிரமணிய சாமி அவர்கள்.


மத நல்இணக்கத்திற்கு தூதுவராக விளங்க வேண்டிய சாமி அவர்களின் மத துவேச விமர்சனங்களால் வெகுண்டு எழுந்த, அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைகழக மாணவர்களின் ஆர்பாட்டத்தால், ஹார்வர்ட் யூனிவெர்சிட்டி 'சாமி' விசயத்தில் தனது அதிர்ப்தியை வெளியிட்டு இருக்கிறது.


இது இவ்வாறிருக்க, மும்பையில் இருந்து வெளிவரும் நாளிதழில், சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக அவர் எழுதி இருந்த கட்டுரை மத நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவித்து உள்ளதாக அவர் மீது குற்ற சாட்டு எழுந்தது. இதை விசாரித்து தீர்ப்பு வழங்கிய டெல்லி உயர் நீதிமன்றம் சாமிக்கு முன் ஜாமீன் வழங்கினாலும், சில கண்டிப்பான அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கி இருக்கிறது.
"நீங்கள் ஒரு புத்திசாலியான மனிதர்தான்.ஆனால் அர்தமுள்ள சில கட்டுபாடுகளை நீங்கள் பின் பற்றியே ஆக வேண்டும். இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு. எனவே சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினர் உணர்வும் மதிக்க பட வேண்டும்"

நீதிமன்றத்தின் முடிவுக்கு தலை வணங்கிய சாமி, வாதாடுகையில் "எனக்கு முஸ்லிம் உறவினர் உள்ளனர், கிருத்துவ உறவினர்களும் உள்ளனர். என் மனைவியோ பார்சி இனத்தை சார்ந்தவர். இனிமேல் ஒருபோதும் இது போன்று கட்டுரை எழுத மாட்டேன். கோர்ட்டு விதிக்கிற தண்டனையை அல்லது நிபந்தனையை ஏற்று நடப்பேன்" என உறுதி மொழி வழங்கினார்.

மத நல்லிணக்கத்தை ஊட்டி வளர்க்க வேண்டிய ஒரு குடும்ப தலைவன் இப்படி மத துவேசத்தை வாரி இறைப்பது ஏன் என்பது தான் சமூக ஆர்வலர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது. இதற்கு நம் சாமி தான் பதில் சொல்ல வேண்டும்.



Sunday, January 29, 2012

HALAL MEAT AND THE HEALTH

ஹலால் இறைச்சியும் ஆரோக்கியமும்



இன்றைய 'SUNDAY TIMES' தந்த செய்தி சற்று நேரம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. ஹலால் இறைச்சி உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது என்று லண்டனில் உள்ள விஞ்சானிகள் சான்று வழங்கி இருக்கிறார்கள். அதற்கு அவர்கள் தரும் விளக்கம் மிகவும் ஆரோக்கியமாக இருப்பது மேலும் அதிசயம்.



உணவுக்காக ஒரு மிருகத்தையோ அல்லது ஒரு பறவையையோ ஒரே வெட்டில் அறுத்தால் இரத்தமானது உறைந்து மாமிசம் இறுகி விடும். அதன் மூலம் நோய் கிருமிகள் பரவும் அபாயம் உண்டு.மேலும் இவ்வாறு அறுக்கப்பட்ட மாமிசத்தை அதிக நாள் பாதுகாக்க இயலாது. அது விரைந்து கேட்டு விடும் என்பது அவர்கள் கண்டுபிடிப்பு.

ஹலால் கட்டிங்கில் உள்ள மகத்துவம் என்ன?
ஹலால் முறைப்படி வெட்டுவதால் மிருகத்தின் குரல் வளையுடன்சேர்ந்துஇரத்தகுழாய்களும்அறுபடுகின்றன.இதனால் மூளைக்கு ரத்தம் செல்வது தடை படுகிறது.இதனால் அறுபடும் மிருகம் வலியை உணர்வது இல்லை.ஆனால் அதன் கால்கள் வலிப்பு வந்தார்போல் அசைவது வலியினால் அல்ல - சுருங்கி விரியும் தன்மை கொண்ட தசையினால் தான். மேலும் மிருகத்தின் உடலில் இருந்து அனைத்து இரத்தமும் வெளியேறி விடுவதால் அதன் உடலில் உள்ள நச்சு சத்துகள் நீங்கி மாமிசம் தூய்மை பெறுகிறது. இதனால் மாமிசம் மிருதுவாகிறது.நோய் கிருமிகள் வெளியேறுவதால் அதிக நாட்கள் வைத்திருந்து பாதுகாப்பாக உன்ன இயலும். இது ஆரோக்கியத்திற்கு உகந்தது.

நான் அமெரிக்கா செல்லும் போதெல்லாம் 'WALLMART' போன்ற பெரிய மால்களில் ஹலால் இறைச்சி இங்கு கிடைக்கும் என்ற போர்டுகள் என் கண்களில் படும். அதிக அமெரிக்கர்கள் அங்கு வரிசையில் நின்று அந்த இறைச்சியை வாங்கி செல்வதை நான் பலமுறை பார்த்ததுண்டு. இப்போது இந்தியா மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளும் ஹலால் முறைக்கு மாறி விட்டன என்பதே இந்த பத்திரிகை தரும் செய்தி. MAC DONALD கூட இந்த முறைக்கு மாறி விட்டதாக குறிப்பிடுகிறது அந்த செய்தி.

Wednesday, January 25, 2012

MOBILES AND THE LOVE MOODS

கை பேசியும் காதல் உணர்வுகளும்

மொபைல் போன் மற்றும் இணையதள வசதிகள் இன்றைய இளைனர் சமுதாயத்தை தாண்டி அனைத்து தரப்பு மக்களையும் இணைக்கும் பாலமாகி விட்டது. காதல் உணர்வுகளை படம் பிடிக்கும் ஒரு அரிய கருவியாக இது மாறிவிட்டது என்பது தான் இன்றைய உண்மை. அறிஞர் அண்ணா அவர்கள் ஒருமுறை குறிப்பிட்டார்கள். பத்திரிகைகள் காலத்தின் கண்ணாடி என்று. இன்றைய காலத்தை அவை எவ்வாறு காட்டுகின்றன என்பது தான் இந்த தகவலின் நோக்கம்.






பெரியவர்களையே திணற வைக்கும் 'MOBILE - FACE BOOK - INTERNET' விபரீதங்களை நன்கு உணர்ந்து அவற்றை எல்லை மீறி பயன்படுத்துவதால் விளையும் தீமைகளை குழந்தைகளுக்கும், இளைனர்களுக்கும் விளக்கும் பெரும் பொறுப்பு பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அதிகம் இருக்கிறது என்பதை பொறுப்பானவர்கள் நன்கு உணர வேண்டும். அமெரிக்காவின் ஜனாதிபதி ஒபாமா தனது குழந்தைகளை mobile, face-book and internet  போன்ற தகவல் தொழில் நுட்ப சாதனங்களை பயன் படுத்த அனுமதிப்பதில்லை என்பதை நமது பெற்றோர்கள் உணர வேண்டும்.


OUR GREAT TEACHERS AND PROFESSORS

நமது ஆசிரியர்களும் -  பேராசிரியர்களும்



பண்பான ஆசிரியைகள் இது போன்ற தவறுகளை
துணிந்து செய்வார்களா?


பெண்கள் கல்லூரி பேராசிரியைகள் இளம் மாணவ
மாணவியருக்கு ஒரு நல்ல 'ROLE MODEL'
என்று சமூகம் கருதுகிறது.

இது எதனால்-எதனால் - எதனால்?



சமீபத்தில் மகாபாரதத்தில் நான் படித்த சம்பவம் ஓன்று என் நினைவுக்கு வருகிறது. பாரத போர் களத்தில் அர்ஜுனனின் அம்பு பட்டு மரண படுக்கையில் கிடக்கிறார் பீஷ்மர்.நினைத்த மாத்திரத்தில் உயிரை விடும் சக்தி பெற்றவர் அவர். இருந்தும் உயிர் போகவில்லை. மிகவும் வருந்திய அவர் இதற்கான காரணத்தை வியாசரிடம் கேட்டார்.வியாசர் சொன்னார் - பீஷ்மரே!..ஒருவர்தனது மனம்,சொல் மற்றும் செயலால் இன்னொருவருக்கு தீங்கு செய்யாவிட்டாலும், பிறர் செய்யும் தீய செயல்களை தடுக்காமல் இருப்பதும் கூட பாவம் தான். அதனால் தான் நீங்களும் கூட இந்த தண்டனையை அனுபவித்து கொண்டிருக்கிறீர்கள் என்று சொன்னார்.

அது சரி... பீஷ்மர் செய்த அந்த தவறுதான் என்ன? துரியோதனன் அவையில்  பாஞ்சாலியை துச்சாதனன் துகில் உரிந்த போது அவையில் பீஷ்மரும் இருந்தார். கண் எதிரே அநியாயம் நடந்தும் அதை தடுக்க முன் வரவில்லை. திரவுபதி அழுதபோது கண் இருந்தும் குருடனாக,காதிருந்தும் செவிடனாக, வாயிருந்தும் ஊமையாக பீஷ்மர் செயல் பட்ட விதம் அவர் நினைவுக்கு வந்தது. அதற்கான தண்டனை தான் உயிர் போகாமல் வேதனை அனுபவிப்பதும் அவருக்கு புரிய வந்தது.

இந்த கதைக்கும் அந்த செய்திகளுக்கும் என்ன தொடர்பு என்றால் அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் உள்ள தொடர்பு தான்.படித்த, பண்புள்ள ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் சமூகத்தின் ஒளி விளக்குகள். அந்த ஒளி மங்காமல் பாதுகாப்பது அவர்கள் கைகளில் தான் இருக்கிறது.




Monday, January 9, 2012

Old man & the son

THE POEM AND THE POET

ஒரு கவிதையும் ஒரு  கவியும்  
புனித மக்கா மாநகரில் ஒரு பிரபல மருத்துவமனையில் குழந்தை மருத்துவ நிபுணராக நான் பணிபுரிந்த நேரம் அது. எங்கள் மருத்துவமனையின் தலைமை மருத்துவராக கேரளாவை சேர்ந்த ஒரு இதய வல்லுநர் பணிபுரிந்தார். அவரின் தந்தை திடீரென இறந்து விட்டார். அந்த செய்தி அறிந்த நானும் மற்றவர்களும் நிச்சயம் அவர் தந்தையின் மறைவுக்காக இந்தியா செல்வார் என எதிர்பார்த்தோம். விசா வரை ரெடியாக இருந்தது. என்றாலும் அவர் பயணத்தை தவிர்த்து விட்டார். தன் தந்தையின் இறுதி யாத்திரையில் கலந்துகொள்ள அவர்  விரும்பவில்லை.
என்னால் இதை சற்றும் ஜீரணிக்க இயலவில்லை. அன்று இரவு எனக்கு உறக்கமும் வரவில்லை. ஒருவித மயக்கம் என்னை ஆட்கொண்டது. வயது முதிர்ந்த ஒரு முதியவர் என்னருகில் நின்று எதோ செவியில் சொல்வது போல் இருந்தது.அதுவும் கவிதை நடையில்.கதைகள் பல எழுதி இருக்கிறேன். பல கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். ஆனால் எந்த கவிதையும் நான் எழுதியதில்லை. என்ன ஆச்சரியம்! மள மளவென்று கவிதை வரிகள் வேகமாக வந்து விழுந்தன - அதுவும் ஆங்கிலத்தில்.
என் மேனேஜர் நான் சொல்ல சொல்ல அந்த வரிகளை அப்படியே கம்ப்யூற்றரில் பதிவு செய்தார்.
ARAB NEWS - சவுதி அரேபியாவின் பிரபல ஆங்கில நாளேடு.
அந்த கவிதையை அப்படியே அந்த பத்திரிகையின் சீப் எடிட்டருக்கு ஈமெயில் செய்தேன். அந்த பத்திரிகை கவிதைகளை எல்லாம் பிரசுரிப்பது இல்லை. அடுத்த நாள் ஒரு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. நான் எழுதிய அந்த கவிதை அந்த பத்திரிகையின் பிரதான முழு பக்கத்தையும் ஆக்கிரமித்து இருந்தது. அப்படி என்ன அந்த கவிதையில் புதுமை.
நீங்கள் தான் சொல்ல வேண்டும்.















































இந்த கவிதை ARAB NEWS பத்திரிகையில் வெளிவந்த நேரம்
என்னை மிகவும் பாராட்டி வாழ்த்து செய்தி அனுப்பிய
ARAB NEWS - EDITOR -IN - CHIEF
அவர்களையும் முக்கிய பிரமுகர்களையும் நண்பர்களையும்
என்னால் மறக்க இயலாது.
இந்த கவிதை மக்காவில் வைத்து வெளியான போதே
சில நண்பர்கள் இதனை வங்காள மொழியிலும், உருது மற்றும் மலையாள
மொழிகளில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டனர்.
இந்த கவிதையை படித்து பார்த்த என் நண்பரும் தமிழக அரசின்
மூத்த IAS. அதிகாரியுமான திரு.அலாவுதீன் அவர்கள் தானே இந்த கவிதையை தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிட போவதாக
என்னிடம் தெரிவித்தார்கள்.
நல்ல கவிஞர்கள் இதை தமிழில் மொழி மாற்றம் செய்தால்
நான் மிகவும் மகிழ்வேன்

Sunday, January 8, 2012

THE IMAGE AND THE MESSAGE

படங்களும் போதனைகளும்

இன்று ஒரு நல்ல தகவலை கேள்வி பட்டேன். அதாவது குழந்தைகளின்
வாசிக்கும் திறன் (READING SKILLS) அதிகரித்து இருப்பதாகவும் பத்திரிகை
செய்திகளை அவர்கள் ஆவலுடன் படித்து அறிவை வளர்பதாகவும்
அதில் குறிப்பிட பட்டிருந்தது. மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஓன்று.
தரமான பத்திரிகைகளில் வரும் செய்திகளை விடுங்கள் - அதில் வரும்
படங்கள் எப்படி இருக்கின்றன. குழந்தைகள் பத்திரிகைகளை படிக்கிறார்களா அல்லது படம் பார்த்து கதை சொல்கிறார்களா



பெண்கள் அணியும் நாகரிக உடைகள் ஆபாசத்தை அள்ளி
தெளிப்பதால் ஆண்கள் வரைமுறைகளை மீறி தகாத செயல்களில்
ஈடுபடுகிறார்கள் என்பது தான் இந்த கட்டுரை தரும் தகவல்.
இந்த கட்டுரையை படிக்க தூண்டும் இந்த படம்
இன்று வெளியான ஒரு தரமான மதிப்பு வாய்ந்த பிரபல ஆங்கில
நாளிதழில் வெளியானது சற்று அதிர்ச்சி தரும் விஷயம் தான்.


சினிமா விளம்பரம்களை பத்திரிகைகளில் அதிகம் பார்த்திருக்கிறோம்
ஆனால் இப்போது வரும் விளம்பரங்கள் கண்களை கூச செய்கின்றன.




மன்மத ராஜா என்றால் என்ன
காமரசம் என்றால் என்ன
மன்மத ராணி என்றால் என்ன
குழந்தைகள் கேட்கும் இந்த அர்த்தமுள்ள கேள்விகளுக்கு
பதில்களை தருவது எப்படி.
தன் மகள் கேட்கும் சிக்கலான இது போன்ற கேள்விகளால்
பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் தாய்மார்கள் தங்கள்
குழந்தைகளின் திடீர் அறிவுத்திறன் கண்டு
கலங்கி போய் நிற்கிறார்கள்.

Friday, January 6, 2012

THE NEWS AND THE SHOCK

சில செய்திகளும் சில அதிர்ச்சிகளும் 

வயிற்று வலியால் துடித்த பெண்ணை பரிசோதித்த
டாக்டருக்கு ஒரு அதிர்ச்சி - காரணம் குழந்தை வயிற்றில்
இறந்து போய் இருந்தது தான். இது தாய்க்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் விசயத்தை விளக்கி அறுவை சிகிச்சைக்கு தயாரானார் டாக்டர். நிலைமை சற்று
மோசமாகவே வேறு ஒரு மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்தார். என்றாலும் சரி செய்ய இயலவில்லை. இது போன்ற
எமர்ஜென்சி கேசில் நிலைமை விபரீதம் ஆக வாய்ப்பு
அதிகம். விளைவு மருத்துவ உதவி பார்த்த பெண் டாக்டர்
வெட்டி கொல்லபட்டார். பிரசவம் பார்ப்பது என்பதும் ஒரு
பேருதவி தான். இந்த உதவிக்கும் "கொல்வது என்பது தான்
கொள்கை" முடிவாக இருந்தால் - இப்போது உயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தைகளை கவனமாய் பார்த்து சிகிச்சை 
அளிக்கவே மனம் தயங்குகிறது. மருத்துவ தொழிலை விட்டு விடவும் யோசிக்க வைக்கிறது.
இனிமேல் நல்ல திறமையான டாக்டர்கள் இந்த 
NOBLE PROFESSION  பக்கம் வர தயங்குவார்கள்.
இந்த தொழிலை விட்டு விட்டு சினிமாவில் நடிக்கவோ அல்லது கிரிக்கட் விளையாட்டில் 
பயிற்சி பெறவோ  அல்லது அரசியலில் களம் இறங்கி மக்களை 
எளிதில் கவர்ந்து ஆட்சியில் அமருவது கூட மிகவும் எளிதான 
தொழில். டென்சன் இல்லாமல் எளிதில் காசு சம்பாதிக்கும் தொழில் 
 என்று என்னுடைய பெரும்பாலான மருத்துவ நண்பர்கள் 
இப்போது சிந்திக்க துவங்கி விட்டார்கள்.

_________________________________________________________________________________

இப்படியும் ஒரு IPS  அதிகாரி


ஐ.பி.எஸ்.ஆக வேண்டும் என்பது இன்றைய படித்த இளைனர்களின்
கனவு. இந்த கனவு நிஜமானால் வாழ்க்கை என்னாகும் என்பதற்கு
அதிகாரி சகரவர்தியின் கதையை படித்தால் புரியும்.
பிளாட்பாரத்தில் கையில் மதுவோடும் வாயில் புகையோடும்
வாழும் இந்த பொறுப்புள்ள போலீஸ் உயர் அதிகாரியின் வாழ்க்கை
லட்சியம் தான் என்ன. அரவிந்தர் ஆசிரமம் அமைந்த புதுவையிலா
இப்படி. நம்ப இயலவில்லை.

________________________________________________________________________________