Thursday, April 5, 2012

TEENAGE STUDENTS AND THE SUICIDE

இளம் மாணவர்களும் தற்கொலையும்

இப்போது மாணவர் தற்கொலை பற்றிய செய்திகள்
பத்திரிகைகளில் அதிக அளவில் வெளியாகின்றன.
இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால்
கீழ் குறிப்பிடும் நிகழ்வுகள் அனைத்தும் ஒரே நாளில்
ஒரே நாளேட்டில் வெளிவந்த செய்திகளாகும்


இந்த மாணவர் பி.இ. மெக்கானிக் படித்து வந்தவர்.
20 பாடங்களில் தோல்வி அடைந்ததால் இந்த முடிவை
மேற்கொண்டதாக தெரிகிறது.


இவர் சட்ட கல்லூரி மாணவர். திருமணம் பிடிக்காமல்
போனதால் தற்கொலை முடிவை மேகொண்டதாக
தகவல் தருகிறது இந்த செய்தி.



சில மரணங்கள் இவரை நிலைகுலைய வைத்ததால்
இந்த துயர  முடிவை மேற்கொண்டு விட்டார்.


இந்த செய்திகளின் பின்னணியை வைத்து சென்னை ஐகோர்டில்
ஒரு வக்கீல் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இது
மிகவும் வரவேற்க தக்க ஓன்று. அவர் கூறுகிறார்.
"மாணவர்களுக்கு மன அழுத்தம்  அதிகம் ஏற்படுகிறது.
மாணவர்களிடம் சில ஆசிரியர்களின் நடத்தையும் மோசமாக உள்ளது"
நீதிபதிகள் கல்வித்துறை அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க
உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.



தற்கொலை என்பது இளம் மாணவர் மத்தியில் ஒரு தொற்று நோய் போல் பரவி விட்டது. 21 - ம் நூற்றாண்டின் புது யுகத்தில், மாணவர்கள் சொல்லொணா மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் என்பது மிகவும் உண்மை. மொபைல், இன்டர்நெட், டிவி, சினிமா போன்றவை இவற்றை ஊக்குவிக்கின்றன. சினிமா காட்சிகளிலும், கற்பனையிலும் மிதக்கும் இன்றைய இளம் மாணவன் நிஜத்திற்கும், நிழலுக்கும் வித்தியாசம் தெரியாமல் வாழ்க்கையை பாழ் படுத்துகிறான். நடிகர்களை தனது 'மாடலாக' எண்ணி தன் வாழ்க்கையையும் அவர்கள் போல் மாற்றி அமைக்க எண்ணுகிறான். நண்பர்களின் சகவாசம், அவர்கள் தரும் "instant advice" இன்றைய மாணவனை சில அவசர முடிவுகளுக்கு இழுத்து செல்கின்றன. காதல் தோல்விகள், பரீட்சை தோல்விகள், படிப்பில் பின் தங்குதல், படிப்பில் கவனமின்மை, சினிமா மோகம், இன்டர்நெட் மற்றும் "DRUG AND ALCOHOL ADDICTION" இன்றய இளைய தலைமுறையை சாவின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தி விடுகின்றன. தோல்விகளை சமாளிக்க உதவும் 'மருந்து மாத்திரைகள்' சில நாளில் வலு இழந்து விடுவதால், மரணமே சிறந்த மாற்று மருந்தாக அவர்கள் மனதில் நிலைத்து விடுகிறது. இந்த அவசர முடிவுகள் பற்றி அவர்கள், தங்கள் பெற்றோர்களிடமோ அல்லது ஆசிரியர்களிடமோ கலந்து பேசுவதில்லை. இன்றைய பெற்றோர்களும் இது பற்றியெல்லாம் பெரிதாக கவலை கொள்வதில்லை. குழந்தைகளின் படிப்பை பற்றி மட்டுமே கவலை கொள்ளும் பெற்றோர், அவர்களின் மன சோர்வு பற்றியோ அல்லது மன அழுத்தம் பற்றியோ, அவர்களின் சொந்த மன போராட்டங்கள் பற்றியோ கவலை கொள்வதில்லை. சிறு பிரட்சினைகளுக்கு கூட வடிகால் தெரியாததாலேயே இந்த மாணவர்கள் இந்த விபரீத முடிவை மேற்கொள்கின்றனர். தீர்வுக்கான  எல்லா வழி கதவுகளையும் அடைத்து விடும் இவர்கள், 'தற்கொலைக்கான'  வாசலின் கதவுகளை மட்டிலும் மிகவும் அகலமாக திறந்து வைத்து கொள்கின்றனர். குழந்தைகளுக்கு முழு அளவிலான உடல் மற்றும் மன நல மருத்துவ பரிசோதனைகளை, சிறந்த குழந்தை மருத்துவரை கொண்டு சோதிப்பது மூலமும் அவர்களின் சிறந்த ஆலோசனைகளை கேட்டு பெறுவதன் மூலமும், குழந்தைகளின் இது போன்ற  துயர் முடிவுகளை ஓரளவுக்கு தடுத்து நிறுத்த இயலும்.