Friday, March 16, 2012

HOW TO SAVE THE CHILDREN FROM THEIR PARENTS

குழந்தைகளின் பெற்றோர்களிடம்  இருந்து
குழந்தைகளை பாதுகாப்பது எப்படி.


இப்போதெல்லாம் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி பேசுவதற்காக
குழந்தை மருத்துவ நிபுணர் என்ற முறையில்
பெரும்பாலான கல்வி நிலையங்களில் என்னை 
பேசுவதற்கு அழைத்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரு சிறு குழந்தை சில நாட்கள் முன்பு ஒரு பழ துண்டை 
விழுங்கி, அது தொண்டையில் அடைத்து விட்டதன் காரணமாக குழந்தை
இறந்து விட்டது. இது சென்னையில் உள்ள ஒரு பிரபல பள்ளியில் 
நடந்த சம்பவம். குழந்தைகளுக்கு இப்போது பாதுகாப்பின்மை 
மிகவும் அதிகரித்து விட்டது. குழந்தைகளை பாதுகாப்பவர்களே, 
குழந்தைகளின் எமனாக மாறி கொண்டு இருக்கிறார்கள்.

குழந்தையின்மை சிகிச்சைக்காக, சென்னையில் இப்போது அதிக 
அளவில் மருத்துவ மனைகள் பெருகி விட்டன. குழந்தை இல்லா
தம்பதியர் எப்படியும், எந்த முறையிலாவது ஒரு குழந்தையை பெற்று 
கொள்ள, துடித்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் குழந்தை பெற்ற 
தம்பதியினரோ, அதை முறையாக பாதுகாக்க வழி தெரியாமல், 
குழந்தைகளை இழந்து விடுகின்றனர். சில நேரங்களில், சுயநலம் 
காரணமாக பெற்ற குழந்தைகளையும் கொன்று விடுகின்றனர். 




மேற்சொன்ன செய்தி 'தினதந்தி' பத்திரிகையில் வந்த தகவல்.
மதுவுக்கு அடிமையான குழந்தையின் தாத்தா தான், குழந்தையை
கடத்தி அதை வேறு ஒரு கும்பலுக்கு விற்க துணிந்தவர் என்று
அறியும்போது, ஒரு குழந்தை மருத்துவர் என்ற முறையில் மனம்
சற்று பேதலிக்கிறது. மருத்துவ சிகிச்சை பயனின்றி, குழந்தை
இறந்தால் கூட அதையும் சிகிச்சை அளித்த மருத்துவரின்
கவன குறைவு என்று சாடும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை
தாங்களே விலை பேசுவதை என்னென்று சொல்வது.




பிறந்து நான்கு நாட்களே ஆன ஒரு ஆண் குழந்தை
குப்பை தொட்டியில் வீசி எறியபட்டது.





இந்த சம்பவத்திலும் குழந்தையின் தாத்தாவுக்கு தொடர்பு
இருக்குமோ என்ற ஐயம் போலிசுக்கு எழுந்துள்ளது.





தாயின் கவன குறைவால் நடந்த துயர் சம்பவம் இது.



மொபைல் பேசும் அவசரத்தில் தந்தை  குழந்தையை காருக்குள்
வைத்து பூட்டி விட்டு சென்றதால் குழந்தை மூச்சு திணறி 
இறந்து விட்டது.

இப்போது சொல்லுங்கள். குழந்தைகளை அவர்களின் 
பெற்றோர்களிடம் இருந்து காப்பது எப்படி. 






No comments:

Post a Comment