Monday, June 18, 2012

MARRIAGES ARE MADE IN HEAVEN

திருமணங்கள் சொர்க்கத்தில்

நிச்சயக்கப்படுகின்றன

இந்த பொன்மொழி உண்மையா அல்லவா என்பது
நம் விவாதமல்ல; ஆனால் இது பொன் மொழியும் அல்ல
பழமொழியும் அல்ல என்பதே நம் கருத்து.
இப்போது திருமணங்கள் இன்டர்நெட் மூலம்
நிச்சயம் செய்யப்படுகின்றன என்பதே முழு உண்மை.
திறமையும் சற்று ஏமாற்று திறனும் இருந்தால் ஒரு
நோஞ்சான் கூட எத்தனை பெண்களை வேண்டுமானாலும்
இப்போது மணம் புரிய இயலும்.
அமீர்கான் என்ற ஒரு மும்பை பேர்வழி 50 பெண்களுக்கு மேல்
ஏமாற்றி திருமணம் புரிந்து கொண்டான் என்பது செய்தி அல்ல
ஒரு முழு அதிர்ச்சி. இவன் பேச்சில் மயங்கி இவனை
மணந்தவர்கள் 150- கும் மேல் நீளும் என்கிறது இன்றைய செய்தி.
பெரும்பாலான பெண்கள் மெத்த படித்தவர்கள்.
சில பெண்கள் பெற்றோரையும் புறம் தள்ளி விட்டு 
இவன் பேச்சில் மயங்கி திருமணம் புரிந்து, ஹனிமூன் முடிந்து 
கணவன் - மனைவியாய் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பது 
நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் இது 
முழுக்க முழுக்க உண்மையாகும்.
மணம் புரிய இருக்கும் பெண்களை இவன் தேர்வு 
செய்யும் முறை மிகவும் அலாதியானது.
குடும்ப பிரச்சினை உள்ள பெண்கள் 
குடும்ப சுமை உள்ள பெண்கள் 
பெற்றோரை விட்டு விலகி இருக்கும் பெண்கள் 
கணவனால் கை விடப்பட்ட பெண்கள் 
இளம் விதவை பெண்கள் 
சற்று வயதான பணக்கார பெண்கள் 
எளிதில் இவன் விரிக்கும் வலையில் வீழ்கின்றனர்.
இவன் வலை விரிப்பது இருக்கட்டும் 
இவன் வலையில் இந்த பெண்கள் எப்படி இவ்வளவு 
எளிதாக விழுகின்றனர்.
வாழ்வு கேள்விக்குறியாகும் என்று உள்ளுணர்வு உணர்த்தியும் 
இந்த விபரீத விளையாட்டில் இந்த இளம் பெண்கள் 
இறங்குவது ஏன்?
தேவை ஒரு ஆண் துணை என்பதாலா?
வெறுமையாகிவிட்ட தங்கள் வாழ்வில் வசந்தம் 
மீண்டும் வீசும் என்பதாலா?
கேள்விக்குறி ஆகிவிட்ட தங்கள் வாழ்க்கையை 
மீண்டும் சீர் செய்ய இயலும் என்பதலா?
பிரிந்து வாழும் கணவனை தண்டிப்பதற்காகவா?
அல்லது எளிதில் விவாக ரத்து பெற்று 
விடலாம் என்ற தைரியத்தாலா ?
திருமணத்தை ஒரு வேடிக்கை - விளையாட்டாய் 
எடுத்து கொண்ட காரணத்தாலா?
"காதல் என்பது எது வரை 
கல்யாண காலம் வரும் வரை, 
கல்யாணம் என்பது எது வரை 
கழுத்தில் தாலி விழும் வரை"

எங்கேயோ, எப்போதோ கேட்ட பாடல் வரிகள் 
அர்த்தம் அன்று புரியவில்லை 
இன்று புரிகிறது.

 

No comments:

Post a Comment