ஒரு கவிதையும் ஒரு கவியும்
புனித மக்கா மாநகரில் ஒரு பிரபல மருத்துவமனையில் குழந்தை மருத்துவ நிபுணராக நான் பணிபுரிந்த நேரம் அது. எங்கள் மருத்துவமனையின் தலைமை மருத்துவராக கேரளாவை சேர்ந்த ஒரு இதய வல்லுநர் பணிபுரிந்தார். அவரின் தந்தை திடீரென இறந்து விட்டார். அந்த செய்தி அறிந்த நானும் மற்றவர்களும் நிச்சயம் அவர் தந்தையின் மறைவுக்காக இந்தியா செல்வார் என எதிர்பார்த்தோம். விசா வரை ரெடியாக இருந்தது. என்றாலும் அவர் பயணத்தை தவிர்த்து விட்டார். தன் தந்தையின் இறுதி யாத்திரையில் கலந்துகொள்ள அவர் விரும்பவில்லை.
என்னால் இதை சற்றும் ஜீரணிக்க இயலவில்லை. அன்று இரவு எனக்கு உறக்கமும் வரவில்லை. ஒருவித மயக்கம் என்னை ஆட்கொண்டது. வயது முதிர்ந்த ஒரு முதியவர் என்னருகில் நின்று எதோ செவியில் சொல்வது போல் இருந்தது.அதுவும் கவிதை நடையில்.கதைகள் பல எழுதி இருக்கிறேன். பல கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். ஆனால் எந்த கவிதையும் நான் எழுதியதில்லை. என்ன ஆச்சரியம்! மள மளவென்று கவிதை வரிகள் வேகமாக வந்து விழுந்தன - அதுவும் ஆங்கிலத்தில்.
என் மேனேஜர் நான் சொல்ல சொல்ல அந்த வரிகளை அப்படியே கம்ப்யூற்றரில் பதிவு செய்தார்.
ARAB NEWS - சவுதி அரேபியாவின் பிரபல ஆங்கில நாளேடு.
அந்த கவிதையை அப்படியே அந்த பத்திரிகையின் சீப் எடிட்டருக்கு ஈமெயில் செய்தேன். அந்த பத்திரிகை கவிதைகளை எல்லாம் பிரசுரிப்பது இல்லை. அடுத்த நாள் ஒரு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. நான் எழுதிய அந்த கவிதை அந்த பத்திரிகையின் பிரதான முழு பக்கத்தையும் ஆக்கிரமித்து இருந்தது. அப்படி என்ன அந்த கவிதையில் புதுமை.
நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
இந்த கவிதை ARAB NEWS பத்திரிகையில் வெளிவந்த நேரம்
என்னை மிகவும் பாராட்டி வாழ்த்து செய்தி அனுப்பிய
ARAB NEWS - EDITOR -IN - CHIEF
அவர்களையும் முக்கிய பிரமுகர்களையும் நண்பர்களையும்
என்னால் மறக்க இயலாது.
இந்த கவிதை மக்காவில் வைத்து வெளியான போதே
சில நண்பர்கள் இதனை வங்காள மொழியிலும், உருது மற்றும் மலையாள
மொழிகளில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டனர்.
இந்த கவிதையை படித்து பார்த்த என் நண்பரும் தமிழக அரசின்
மூத்த IAS. அதிகாரியுமான திரு.அலாவுதீன் அவர்கள் தானே இந்த கவிதையை தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிட போவதாக
என்னிடம் தெரிவித்தார்கள்.
நல்ல கவிஞர்கள் இதை தமிழில் மொழி மாற்றம் செய்தால்
_______________________________________________________________
No comments:
Post a Comment