சில செய்திகளும் சில அதிர்ச்சிகளும்
வயிற்று வலியால் துடித்த பெண்ணை பரிசோதித்த
டாக்டருக்கு ஒரு அதிர்ச்சி - காரணம் குழந்தை வயிற்றில்
இறந்து போய் இருந்தது தான். இது தாய்க்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் விசயத்தை விளக்கி அறுவை சிகிச்சைக்கு தயாரானார் டாக்டர். நிலைமை சற்று
மோசமாகவே வேறு ஒரு மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்தார். என்றாலும் சரி செய்ய இயலவில்லை. இது போன்ற
எமர்ஜென்சி கேசில் நிலைமை விபரீதம் ஆக வாய்ப்பு
அதிகம். விளைவு மருத்துவ உதவி பார்த்த பெண் டாக்டர்
வெட்டி கொல்லபட்டார். பிரசவம் பார்ப்பது என்பதும் ஒரு
பேருதவி தான். இந்த உதவிக்கும் "கொல்வது என்பது தான்
கொள்கை" முடிவாக இருந்தால் - இப்போது உயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தைகளை கவனமாய் பார்த்து சிகிச்சை
அளிக்கவே மனம் தயங்குகிறது. மருத்துவ தொழிலை விட்டு விடவும் யோசிக்க வைக்கிறது.
இனிமேல் நல்ல திறமையான டாக்டர்கள் இந்த
NOBLE PROFESSION பக்கம் வர தயங்குவார்கள்.
இந்த தொழிலை விட்டு விட்டு சினிமாவில் நடிக்கவோ அல்லது கிரிக்கட் விளையாட்டில்
பயிற்சி பெறவோ அல்லது அரசியலில் களம் இறங்கி மக்களை
எளிதில் கவர்ந்து ஆட்சியில் அமருவது கூட மிகவும் எளிதான
தொழில். டென்சன் இல்லாமல் எளிதில் காசு சம்பாதிக்கும் தொழில்
என்று என்னுடைய பெரும்பாலான மருத்துவ நண்பர்கள்
இப்போது சிந்திக்க துவங்கி விட்டார்கள்.
_________________________________________________________________________________
இப்படியும் ஒரு IPS அதிகாரி
_________________________________________________________________________________
இப்படியும் ஒரு IPS அதிகாரி
ஐ.பி.எஸ்.ஆக வேண்டும் என்பது இன்றைய படித்த இளைனர்களின்
கனவு. இந்த கனவு நிஜமானால் வாழ்க்கை என்னாகும் என்பதற்கு
அதிகாரி சகரவர்தியின் கதையை படித்தால் புரியும்.
பிளாட்பாரத்தில் கையில் மதுவோடும் வாயில் புகையோடும்
வாழும் இந்த பொறுப்புள்ள போலீஸ் உயர் அதிகாரியின் வாழ்க்கை
லட்சியம் தான் என்ன. அரவிந்தர் ஆசிரமம் அமைந்த புதுவையிலா
இப்படி. நம்ப இயலவில்லை.
________________________________________________________________________________


மருத்துவர் சேதுலட்சுமி குறித்த உங்கள் கருத்துகளில் மாறுபடுகிறேன். உயிர்காக்கும் மருத்துவர்களை தம் உயிரைவிட் மேலாக மதிப்பார்கள் மக்கள். ஆனால், இன்று மருத்துவம், சேவை என்பதைவிட, வியாபாரம் என்றே செயல்படுகிறது - கல்வியைப் போல!! விதிவிலக்குகள் நிச்சயம் உண்டு. எனினும், பெரும்பான்மை இப்படித்தான் இருக்கிறது. நானும் அனுபவித்திருக்கிறேன், எனினும், கிரிட்டிகலான நேரங்களில் எதிர்த்துப் பேச முடிவதில்லை என்பதாலேயே அனைவரும் அமைதியாயிருக்கிறார்கள்.
ReplyDeleteகுறிப்பிடப்பட்ட மருத்துவர் சேதுலட்சுமியைக் குறித்து இன்றைய செய்திகளில் வாசித்தது:
மயக்க மருந்தியல் நிபுணரான டாக்டர் சேதுலட்சுமி, மகப்பேறு மருத்துவராகவும், அறுவை சிகிச்சை (சர்ஜன்) நிபுணராகவும் மாறியிருக்கிறார். இதுவும் மருத்துவ விதிமீறல் என்பது குற்றச்சாட்டு. இதுமட்டுமின்றி, "தன்னிடமே பல முறை, வழக்கமான பரிசோதனை செய்து வந்த கர்ப்பிணிக்கு, அறுவை சிகிச்சை செய்ய, பணம் கொண்டு வரும் வரை காத்திருந்தார்' என்பது, கர்ப்பிணி குடும்பத்தாரின் குற்றச்சாட்டு. இந்த இடத்தில், உயிருக்கு முன், பணம் பிரதானமாக இருந்துள்ளது.
இது உண்மையெனில், தவறு யார்மீது?